CSK vs RCB LIVE score: எழுச்சி பெறுமா சென்னை? பெங்களூருடன் இன்று மோதல்!

IPL 2022 CSK vs RCB LIVE Updates in tamil: 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை டாக்டர் டிஒய் பாட்டீல் மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் 22-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியனான சென்னை 4 தொடர் தோல்வியை சந்தித்து துவண்டுள்ளது. ஒரு போட்டியில் பேட்டிங், ஒரு போட்டியில் பந்துவீச்சில் என மாறி சொதப்பியுள்ளது.

எனினும், இது போன்ற இக்கட்டான தருணங்களை அந்த அணி கடந்து வந்துள்ளது. தற்போது சென்னை அணியில் களமிறங்கும் வீரர்கள் பதற்றமின்றி தங்களது பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மேலும், வெற்றிக்கணக்கை தொடங்காத சென்னை அணி எஞ்சிய ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றால் தான் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு சிக்கலின்றி தகுதி பெற முடியும் என்கிற நெருக்கடியிலும் உள்ளது. எனவே, அதற்கேற்ப வியூகங்களுடன் அணி களம் இறங்கும்.

நடப்பு தொடரில் ஒரு தோல்வி மட்டும் பெற்றுள்ள ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஹாட்ரிக் வெற்றியை ருசித்த உற்சாகத்தில் உள்ளது. அந்த அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு வரிசையின் பலம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இருப்பினும், சகோதரியின் மரணம் காரணமாக பயோ பபுளில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் (6 விக்கெட்) வெளியேறியுள்ளார். அவர் வெளியேறி இருப்பது அந்த அணிக்கு ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது.

ஆனாலும், வலுவான அணியாகவே இருக்கும் பெங்களூருவை சென்னை சமாளித்து எழுச்சி பெறுமா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம். வெற்றிக்கணக்கை தொடங்க சென்னை அணியும், உத்வேகத்தை தொடர பெங்களூரு அணியும் கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

Indian Premier League, 2022Dr. DY Patil Sports Academy, Navi Mumbai   12 April 2022

Chennai Super Kings 

vs

Royal Challengers Bangalore  

Match Yet To Begin ( Day – Match 22 ) Match begins at 19:30 IST (14:00 GMT)

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Live Updates

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.