Flipkart Big Saving Days: iPhone 13 Mini இல் அளவில்லா அற்புத சலுகைகள்

ஆன்லைன் ஷாப்பிங் இணையதளமான பிளிப்கார்ட்டில் ‘பிக் சேவிங் டேஸ்’ விற்பனை ஏப்ரல் 12 முதல் தொடங்கியுள்ளது, இதில் ஸ்மார்ட்போன்கள் முதல் வீட்டு உபயோகப் பொருட்கள் வரை அனைத்திலும் பெரும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த விற்பனையில் இருந்து நீங்கள் ஐபோன் 13 மினி போனை 50 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக விலையில் வாங்கலாம். எனவே ஐபோன் 13 மினி போனை 50 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக விலையில் வாங்குவது எப்படி என்பதை இன்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

ஐபோன் 13 மினியில் பம்பர் சலுகை
ஐபோன் 13 மினியின் 128 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.69,900 ஆகும். பிளிப்கார்ட்டிலிருந்து இந்த ஸ்மார்ட்போனை 7% தள்ளுபடியுடன் ரூ.64,999க்கு வாங்கலாம். அதேசமயம் ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், ஐபோன் 13 மினியின் விலையை ரூ.62,999 ஆக ஆகும், அதன்படி இதில் கூடுதலாக ரூ.2,000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | புதிய iPhone SE 3-ஐ 28,900 ரூபாய்க்கு வாங்க அறிய வாய்ப்பு!

50 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான விலையில் ஐபோன் 13 மினி
இது தவிர, வங்கிச் சலுகையும் இதில் அடங்கும். அதன்படி க்குப் பிறகு, ஐபோன் 13 மினி (128 ஜிபி) ஐ ரூ.62,999க்கு வாங்கலாம். டீலில் கொடுக்கப்பட்டுள்ள எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மூலம் ரூ.16,000 வரை சேமிக்கலாம். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், ஐபோன் 13 மினியை ரூ.46,999க்கு வாங்க முடியும்.

ஐபோன் 13 மினியின் அம்சங்கள்
ஐபோன் 13 மினி ஓஎல்இடி சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேக்களுடன் ஸ்டஅண்டர்ட் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் எச்டிஆர் 10, எச்எல்ஜி எச்டிஆர் மற்றும் டால்பி விஷன் போன்ற ஆதரவுடன் வருகின்றன. வடிவமைப்பு சற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது, பின்புறத்தில் ஒரு சிறிய நாட்ச் மற்றும் குறுக்காக உட்பொதிக்கப்பட்ட கேமரா அமைப்பை பெறுகின்றன. ஐபோன் 13 மினி 5.4 இன்ச் ஸ்க்ரீனைக் கொண்டுள்ளது. அத்துடன் இதில் 5ஜி திறன் கொண்ட ஏ 15 பயோனிக் சிப்செட்டை பேக் செய்கிறது. இது அதன் போட்டியாளர்களை விட 50 சதவீதம் வேகமான சிபியு மற்றும் 30% சிறந்த ஜிபியு செயல்திறனை வழங்கும் என்று கூறப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை,  ஐபோன் 13 மினி டூயல் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளன, இதில் 12MP யூனிட்ஸ் உள்ளன.

12 எம்பி மெயின் சென்சார் ஒரு பெரிய 1.7 மைக்ரான் பிக்சல்கள் மற்றும் எஃப்/1.5 லென்ஸைக் கொண்டுள்ளது, இதனால் முன்பை விட 47 சதவிகிதம் அதிக ஒளியைக் கைப்பற்ற முடியும் என்று ஆப்பிள் கூறுகிறது, அதே நேரத்தில் 12 எம்பி அல்ட்ரா-வைட் சென்சார் ஆனது எஃப்/2.4 லென்ஸ் மற்றும் 120 டிகிரி எஃப்ஓவி ஆனது 50% அதிக ஒளியை கேப்சர் செய்யுமாம். கூடுதலாக, sensor-shift stabilisation-ஐ ஆதரிக்கும். உடன் ஒரு புதிய சினிமா மோட் மற்றும் ஃபோகஸ் டிரான்சிஷன் ஆதரவும் உள்ளது. செல்பீ மற்றும் வீடியோ அழைப்பிற்காக, இரண்டு போன்களும் முன்பக்கத்தில் 12 எம்பி ட்ரூடெப்த் கேமராவைக் கொண்டுள்ளன. ஐபோன் 13 மினி பேட்டரி ஆயுள் ஆனது ஐபோன் 12 மினியை விட 1.5 மணிநேரம் அதிகம். 

மேலும் படிக்க | ஐபோனின் 13 மாடல் போன் உற்பத்தி சென்னை ஃபாக்ஸ்கான் ஆலையில் தொடங்கியது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.