பிளிப்கார்டில் அதிரடி சலுகை: Redmi Note 10G போனின் விலை வெறும் ரூ. 1500

பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ்: பிளிப்கார்டில் பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனை ( Flipkart Big Saving Days Sale) ஏப்ரல் 12 முதல் தொடங்கியுள்ளது. இது ஏப்ரல் 14 வரை இருக்கும். 

இந்த விற்பனையில், ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பல எலக்ட்ரானிக் பொருட்கள் மீது அற்புதமான தள்ளுபடிகள் கிடைக்கின்றன. மிகவும் விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களை இந்த சேலில் மிகவும் மலிவாக வாங்க முடியும். இந்த சேலில் கிடைக்கும் பல்வேறு சலுகைகள் மூலம் மிகக்குறைந்த விலையில் தொலைபேசிகளை வாங்கலாம்.
 
ரெட்மி சமீபத்தில் நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேலில் ரெட்மி நோட் 10டி 5ஜி -ஐ ரூ.1500க்கு குறைவாக வாங்கலாம். எப்படி என்று இந்த பதிவில் காணலாம். 

பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ்: ரெட்மி நோட் 10டி 5ஜி-ல் கிடைக்கும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்

ரெட்மி நோட் 10டி 5ஜி 4ஜிபி ரேம் + 64ஜிபி சேமிப்பக மாறுபாட்டின் தொடக்க விலை ரூ.16,999 ஆகும். எனினும், இந்த பிளிப்கார்ட் விற்பனையில் இந்த போன் ரூ.12,999க்கு கிடைக்கிறது. அதாவது போனில் 4 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதற்குப் பிறகு இதில் ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளது. இதன் காரணமாக போனின் விலை கணிசமாகக் குறையும்.

மேலும் படிக்க | பாதிக்கும் குறைவான விலையில் ஐபோன் 13 வாங்க அரிய வாய்ப்பு 

பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ்: ரெட்மி நோட் 10டி 5ஜி-ல் கிடைக்கும் எக்ஸ்சேஞ்ச் சலுகை

ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போனில் ரூ.11,550 எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் உள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனை மாற்றிக் கொண்டால், இந்த தள்ளுபடியை பெறலாம். எனினும் இந்த தள்ளுபடியை பெற பழைய போன் நல்ல நிலையிலும், சமீபத்திய மாடலாகவும் இருக்க வெண்டும். அப்போதுதான் ரூ.11,550 தள்ளுபடி கிடைக்கும். இந்த தள்ளுபடியை வாடிக்கையாளர்கள் முழுமையாக பெற முடிந்தால், போனின் விலை ரூ.1,449 ஆக குறைந்துவிடும். 

பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ்: ரெட்மி நோட் 10டி 5ஜி-ல் கிடைக்கும் வங்கி சலுகை

நீங்கள் பழைய ஸ்மார்ட்போனை மாற்ற விரும்பவில்லை என்றால், இந்த டீலில் வங்கி சலுகையும் உள்ளது. ரெட்மி நோட் 10டி 5ஜி-ஐ வாங்க ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தினால், உடனடியாக ரூ.3 ஆயிரம் தள்ளுபடி கிடைக்கும். அதாவது, போனின் விலை ரூ.9,999 ஆக குறையும்.

மேலும் படிக்க | ஃப்ளிப்கார்ட்டில் 76% தள்ளுபடியுடன் ஐபோன், ஆண்ட்ராய்டு போன்கள்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.