இலங்கை கிரிக்கெட் வீரர்கள் IPLல் இருந்து விலக வேண்டும்: அர்ஜுன ரணதுங்க

இலங்கையில் நாளுக்கு நாள் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில்,  இந்தியாவில் நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த பல வீரர்கள் பங்கேற்கின்றனர். இலங்கைக்கு உலகக் கோப்பையை பெற்றுத் தந்த இலங்கை அணியின் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா, தனது நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு, ஐபிஎல்லில் இருந்து வெளியேறி நாடு திரும்புமாறு  கேட்டுக் கொண்டுள்ள அவர், இலங்கையின் இத இக்கட்டான நேரத்தில் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் நாட்டுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று ரணதுங்க கூறினார்.

கிரிக்கெட் வீரர்கள் நாட்டிற்கு ஆதரவாக நிற்க வேண்டும்

ஐபிஎல் தொடரில் விளையாடும் இலங்கை வீரர்கள் தங்கள் நாட்டுக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என அர்ஜூன ரணதுங்க வலியுறுத்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் பல கிரிக்கெட் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாக  தெரிவித்துள்ள ரணதுங்க, ஆனால், தங்கள்  நாட்டைப் பற்றி பேசுவதில்லை, அரசுக்கு எதிராக பேச அஞ்சுகின்றனர் என்றார். கிரிக்கெட் வீரர்களும் தங்களை காப்பாற்ற முயற்சிக்கின்றனர்.

மேலும் படிக்க | Srilanka Crisis: வரும் நாட்களில் வரிகள் மேலும் உயரும்; இலங்கை நிதி அமைச்சர் கொடுக்கும் அதிர்ச்சி

இப்போது சில இளம் கிரிக்கெட் வீரர்களும் தைரியமாக முன் வந்து போராட்டத்திற்கு ஆதரவாக அறிக்கைகள் கொடுத்துள்ள நிலையில், மூத்த கிரிக்கெட் வீரர்கள் இந்த நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது என்றார்.  

‘வேலையை விட்டுவிட்டு ஆர்ப்பாட்டங்களில் சேருங்கள்’

அர்ஜுன ரணதுங்க அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தவறு நடந்தால் அதை பற்றி பேச வேண்டும் என்றார். நான் ஏன் போராட்டம் நடத்துகிறேன் என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். நான் கடந்த 19 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன், இது அரசியல் பிரச்சினை அல்ல. இது மக்கள் பிரச்சனை என்பதை கிரிக்கெ வீரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஐபிஎல்லில் விளையாடும் கிரிக்கெட் வீரர்கள் யார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும் என்றும் ரணதுங்க மேலும் தெரிவித்தார். அவர் பெயரைச் சொல்ல விரும்பவில்லை, ஆனால் அவர் ஒரு வாரம் வேலையை விட்டு விட்டு போராட்டத்திற்கு ஆதரவாக வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

மேலும் படிக்க | Srilanka Crisis: இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலையும் குடும்ப அரசியலும்…

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.