பீஸ்ட் படத்தில் விஜய் பேசிய ஹிந்தி வசனம் குறித்து.. அதிமுக ஜெயக்குமார் கருத்து.!

நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இந்தி மொழி வசனம் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தில் இந்தி மொழி குறித்து நடிகர் விஜய் பேசும் வசனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தி மொழி பேசுபவர்கள் புரிய வேண்டும் என்பதற்காக நாங்கள் இந்தியை கற்றுக் கொள்ள முடியாது என்றும் நீங்கள் வேண்டுமானால் தமிழ் மொழியை கற்றுக் கொள்ளுங்கள் என்று அவர் வசனம் பேசியுள்ளார்.

இந்த வசனம் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விஜய் கூறியது சரிதான் என்றும் எங்களைப் பொருத்தவரை தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிக் கொள்கைதான் உறுதியுடன் இருக்கிறோம் என்றும் இந்தியைத் தொடர்ந்து எதிர்ப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.