பேன், பொடுகு தொற்றை நிரந்தரமாக போக்க வேண்டுமா? இதை செய்தாலே போதும்


பொதுவாக பெண்கள் அனைவருமே சந்திக்கும் பிரச்சினைகளில் கூந்தல் பிரச்சினைகளில் முக்கியமானது பேன், பொடுகு பிரச்சினை.

இது கூந்தலின் அழகையும், ஆரோக்கியத்தையும் கெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

தலையில் பேன் இருந்தால் அது பொடுகையும் அலர்ஜியையும் ஏற்படுத்தி விடும்.

குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள், அலுவலகத்திற்கு செல்வோர் தலையில் அரிப்பு ஏற்படுவதால் பல்வேறு பிரச்சனை சந்திக்கின்றனர்.

எனவே இவற்றை ஆரம்பத்திலே கட்டுப்படுத்த ஒரு சுலபமான வழி ஒன்றை இங்கே பார்ப்போம்.

தேவை

  • வசம்பு – 5 துண்டுகள்
  • வேப்பிலை கொட்டை – 2 டீஸ்பூன் (வேப்ப எண்ணெயும் பயன்படுத்தலாம்)
  • நல்லெண்ணெய் – 100 மில்லி அளவு

செய்முறை

  • வசம்பை தட்டி துண்டுகளாக்கவும், இதை இடித்து மிக்ஸியில் கொரகொரப்பாக பொடிக்கவும். அதே போன்று வேப்ப இலை கொட்டைகளை அரைக்கவும்.
  • வாணலியில் நல்லெண்ணெய் விட்டு மிதமான தீயில் வைக்கவும். எண்ணெயில் அரைத்த கலவையை சேர்த்து 4- 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  • அடுப்பை அணைத்து எண்ணெயை இறக்கி அறைவெப்பநிலைக்கு வந்தவுடன் அதை கண்ணாடி பாட்டிலில் ஊற்றி சேமிக்கவும். 
  • இந்த எண்ணெயை உச்சந்தலை முழுவதும் படரும் படி விட்டு நன்றாக மசாஜ் செய்யவும். உச்சந்தலை பகுதி, முடியின் நுனி வரை நன்றாக மசாஜ் செய்து தளர விடவும். அதற்கு முன்பு சீப்பு கொண்டு சீவினால் எண்ணெய் முடி முழுவதும் படரும்.
  • சீப்பில் பேன் வரவும் செய்யும். பிறகு ஹேர் கவர் போட்டு நன்றாக ஒரு மணி நேரம் வரை விடுங்கள். பின்பு அரப்புத்தூள் சேர்த்து தலையை சுத்தம் செய்யுங்கள்.
     

  • வாரம் இரண்டு நாள் இதை செய்து வந்தாலே பேன் தலைதெறிக்க ஓடிவிடும். குழந்தைகளுக்கும் இந்த எண்ணெயை பயன்படுத்தலாம்.
  • பேன் நின்ற பிறகு படிப்படியாக மாதம் ஒரு முறை, இரண்டு மாதம் ஒரு முறை பயன்படுத்தி வந்தால் பேன் உங்கள் பக்கமே எட்டிப்பார்க்காது. 

நன்மைகள்

  • வசம்பு சிறந்த பேன் நீக்கி சிகிச்சையாக செயல்படுகிறது. இது உச்சந்தலையில் அல்லது முடியை பாதிக்காமல் பேன்களை திறம்பட கொல்லும்
  • பொடுகு நீக்கி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
  • உச்சந்தலை தொடர்பான பிரச்சனைகளுக்கும் சிகிச்சை அளிக்கிறது இதில் இருக்கும் ஆன் டி -பாக்டீரியல் பண்புகள் உச்சந்தலை தொற்றை குணப்படுத்த செய்கிறது.

குறிப்பு

கூந்தலை அலசியதும் இயற்கையாக உலரவிட்டு மென்மையாக வாரினாலே பேன். பொடுகு மொத்தமும் உதிரும். நல்லெண்ணெய் பயன்படுத்துவதால் கூந்தலுக்கும் ஆரோக்கியம். வேப்ப எண்ணெய் உச்சந்தலை தொற்றை நீக்கும். வசம்பு பூஞ்சை தொற்றை நீக்கும்.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.