மைலடியில் ,முன்னாள் போராளிகளுக்காக தளபதியின் புதிய வீட்மைப்புத் திட்டம்

யாழ் குடாநாட்டில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு இயன்றளவு வீடுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ், 2021 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் திகதி யாழ்ப்பாணம் மயிலடியைச் சேர்ந்த திரு ராசவல்லன் தபோரூபனின் ஏழ்மை நிலையை தளபதியின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதை அடுத்து அவருக்குப் புதிய வீட்டினை நிர்மானிக்கும் திட்டமானது பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, மற்றும், யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா, அவர்களினால் முன்னெடுக்கப்பட்டது.

24 ஜூன் 2021 அன்று ஜனாதிபதியின் சிறப்பு மன்னிப்பின் பேரில் விடுவிக்கப்பட்ட பின்னர் பயனாளி புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் மீண்டும் இணைக்கப்பட்டார், ஆனால் அவரது மகள் மற்றும் குடும்பத்திற்கு தங்குமிடம் இல்லாமல் இருந்ததை கருத்தில் கொண்டு (நவம்பர் 3) அவருக்கு புதிய வீடு வழங்கும் திட்டத்திற்கு வருகை தந்த இராணுவத் தளபதியால் கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இராணுவத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க 55 வது படைத் தலைமையகத்தின் தளபதி பிரிகேடியர் பிரசன்ன குணரத்ன அவர்களின் ஒருங்கிணைப்பின் ஊடாக இந்த புதிய வீட்டை நிர்மாணிப்பதற்கான நிதிப் அனுசரணையையானது திரு விஷ் நடராஜா அவர்களால் வழங்கப்பட்டது. மேலும் அதே போல், 10 வது இலங்கை பீரங்கி படையணியின் சிப்பாய்கள், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 515 வது பிரிகேட் தளபதி கேணல் அருண விஜேகோனின் மேற்பார்வையின் கீழ் நிர்மாணப் பணிகளுக்கு தேவையான மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவம் ஆகியவற்றை வழங்கினர்.

பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்த போது, நிரந்தர காயமடைந்த முன்னாள் போராளிகளின் நலனுக்காக பிரத்தியோக வீட்டுத் திட்டத்தை கிராம சேவை அதிகாரிகளுடன் இணைந்து நடைமுறைப்படுத்துமாறு யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு அறிவுறுத்தினார்.

திங்கட்கிழமை (11) இத்திட்டத்தின் முன்னோடியான, பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, அவர்கள் இராணுவத் தலைமையகத்திலுள்ள இராணுவத் தளபதியின் அலுவலகத்திலிருந்து ஜூம் தொழில்நுட்பத்தின் ஊடாக திரு ராசவல்லன் தபோரூபனுக்கு மைலடியில் வீட்டினை கையளிக்கும் நிகழ்வில் இணைந்து கொண்டார். மேலும் ஒளிமயமான எதிர்காலத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்ததோடு சமய நிகழ்வுகள் இடம்பெற்ற பின்னர் வீடு கையளிக்கும் வன்னம் திறப்பு பலகை ஒன்றும் திறந்து வைக்கப்பட்டது.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா மற்றும் அனுசரணையாளரான திரு விஷ் நடராஜா அவரது துணைவியார் திருமதி நடராஜா ஆகியோருடன் இணைந்து, இந்து மத சடங்குகள் மற்றும் சடங்குகள் செய்யப்பட்ட பிறகு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டின் சாவியை முன்னாள் போராளியிடம் கையளித்தார்.

55 வது படைப் பிரிவின் தளபதி பிரிகேடியர் பிரசன்ன குணரத்ன, சிரேஷ்ட அதிகாரிகள், அரச அதிகாரிகள், பயனாளிகளின் உறவினர்கள், வீட்டினை நிர்மாணித்த படையினர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இலங்கை இராணுவம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.