விஜய் ரசிகர்களை வணங்கிய பிரபல நடிகர்!

விஜய்
நடிப்பில்
பீஸ்ட்
திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். காலை முதல் சிறப்பு காட்சிகளுடன் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.

பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதும்
விஜய் ரசிகர்கள்
படத்தை கொண்டாடி வருகின்றனர். நள்ளிரவு முதலே திரையரங்குகள் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. கட் அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்தும் திரையரங்குகள் முன்பு வாண வேடிக்கை நடத்தியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர் ரசிகர்கள்.

இந்நிலையில் பிரபல நடிகரான
பார்த்திபன்
விஜய் ரசிகர்களை பாராட்டி வணங்கியுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், ‘At dawn it’s quiet here’ என்றொரு படமுண்டு.ஆனால் இன்று At dawn it’s quake here காரணமாய் அமைதியே வடிவான விஜய் என்னும்
Beast
.நேற்றைய இரவின் நிழல்களாய் ஆங்காங்கே உறைந்து கிடந்து, விடியலை, உண்டுயலை உடைப்பதைப் போல உடைத்தெடுத்து,திரையரங்குகளை திருவிழாகளாக்கிய ரசிகர்களை வணங்குகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Beast-க்கு FDFS show போயிருவேன் – மனம் திறந்த மாஸ்டர் மகேந்திரன்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.