வீட்டுல மோர் இருக்கா? உங்க எடையை குறைக்க சிம்பிளான 3 ரெசிபி!

Weight Loss foods in tamil: கோடை கால பானமாகவும், உடலுக்கு குளிர்ச்சி தரும் ஆகாரமாகவும் மோர் அறியப்படுகிறது. இவை தவிர பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை இவை அள்ளித்தருகிறது. அதில் குறிப்பிடும் படியான ஒன்றாக உடல் எடை இழப்பு உள்ளது.

நமது உடலின் எடையை இழக்க பல்வேறு உணவுகளை உட்கொண்டு வருவோம். அவை சில நாளிலே நமக்கு சலிப்பை தந்துவிடுகின்றன. மேலும், நமக்கு பிடித்த உணவுகளை தேடிச் செல்லும் எண்ணத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால், இன்று நாம் பார்க்கவுள்ள உணவு குறிப்புகள் மிகவும் டேஸ்டியானாவை. அவை எடை இழப்பிற்கும் உதவுகின்றன.

அந்த வகையில் உடல் எடையை குறைக்க உதவும் 3 மோர் ரெசிபிகளை இங்கு பார்க்கலாம்.

மோர் சாம்பார்

இந்த செய்முறை நமது சிறந்த பரிந்துரைகளில் ஒன்றாகும். உள்ளூர் மசாலாப் பொருட்களால் நிரப்பப்பட்ட ஒரு தென்னிந்திய சுவை கொண்டது மோர் சாம்பார். இவற்றை தோசை, இட்லி, வடை, அப்பம் என பலவற்றுடன் சேர்த்து ருசிக்கலாம். இந்த சாம்பார் உணவு சத்து நிறைந்தது மற்றும் சுவையான மசாலாக்கள் நிறைந்தது. இந்த சாம்பார் ரெசிபியை எந்த நேரத்திலும் நீங்கள் தயார் செய்யலாம்.

சங்கிரி காந்தா

இது ஒரு சுவையான பாரம்பரிய ராஜஸ்தானி கறியாகும். சாங்கிரி பீன்ஸ் பொதுவாக சுவையில் சாதுவாக இருக்கும், ஆனால் நீங்கள் அவற்றை எப்படி சமைக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து ஒரு அருமையான உணவாக மாற்றலாம். இந்த செய்முறையில், ஒரு தனித்துவமான மற்றும் சத்தான உணவை உருவாக்க பல்வேறு இந்திய மசாலாப் பொருட்களுடன் இந்த பீன்ஸை மோரில் தயாரிக்கிறார்கள். இதை ரொட்டி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம்.

மோரு கறி அல்லது மோர்க்குழம்பு

ஒரு சில அன்றாட வீட்டுப் பொருட்களைப் பயன்படுத்தி 20 நிமிடங்களில் மோரு கறி அல்லது மோர்க்குழம்பை தயார் செய்யலாம். இந்த சுவையான குழம்பு, தேங்காய் எண்ணெய், தேங்காய் துருவல் மற்றும் எளிய தென்னிந்திய மசாலாப் பொருட்களுடன் சமைக்கப்படுகிறது, இது கறிக்கு அதன் அசல் சுவையை அளிக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.