“உங்கள் விலைமதிப்பற்ற தியாகங்களை யாராலும் சிறுமைப்படுத்தவோ மறக்கவோ முடியாது” என்று இராணுவ தளபதி 'அபிமன்சல' போர் வீரர்களிடம் தெரிவிப்பு

ஜனநாயகத்தையும் இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் போர்க்களத்தில் செய்த வீரம் மற்றும் உயர்ந்த தியாகங்கள் மற்றும் எவ்வாறு அவர்கள் தங்கள் உயிரையும், கால்களையும் பணயம் வைத்து எதிரிகளை எதிர்த்துப் போரிட்டார்கள் என்பதனையும் மறந்துவிடமுடியாது.

பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா அவர்கள் ஏப்ரல் 13 பிற்பகல் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினம் பிறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர், கடுமையாக காயமடைந்த மற்றும் நிரந்தர அங்கவீனமுற்ற போர்வீரர்கள் குழுவொன்று புனர்வாழ்வு மற்றும் மறுவாழ்வு பெற்று வரும் இடமான ‘அபிமன்சல’ (போர் வீரர்களின் விடுதி) க்கு விஜயம் செய்தார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு குறித்த ஊனமுற்ற போர்வீரர்களின் வார்டுகளுக்குச் சென்று பண்டிகையின் முக்கியத்துவத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில் அவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களுடன் ஒரு டெப் தொலைபேசியும் பரிசாக வழங்கப்பட்டது. இதேவேளை, அபிமன்சலவில் ஊனமுற்ற போர்வீரர்களின் உதவியாளர்களின் அயராத பணிகளைக் கருத்தில் கொண்டு, இராணுவத் தளபதி அவர்கள் ஒவ்வொருவருக்கும் கையடக்கத் தொலைபேசியை அன்பளிப்பாக வழங்கினார். ஜெனரல் ஷவேந்திர சில்வா, போர்க்களத்தில் காயங்களுக்கு உள்ளான ஊனமுற்ற போர் வீரர்களுடன் அவர்களின் நலன், சிகிச்சையின் முன்னேற்றம் தொடர்பாக அவர்களுடன் கலந்துரையாடியதுடன் அவர்களது குடும்ப உறுப்பினர்களுடனும் தொடர்புடைய ஏனைய விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தினார். “எங்கள் தாய்நாட்டின் பிரிவினைக்கு எதிரான போராட்டத்தில் நானும் ஒரு அங்கத்தினராக இருந்து, நீங்கள் அனைவரும், கடமைக்கு அப்பால் உங்களில் பலர், இன்று நாம் அனைவரும் அனுபவிக்கும் அமைதி, சுதந்திரம் மற்றும் சுகபோகங்களை அடைவதற்காக அர்ப்பணிப்புடனும் போர்க்களத்தில் இருந்தீர்கள்.

உங்கள் உறுப்புகளை இழந்து நீங்கள் பயமின்றி நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாத்தீர்கள், உண்மையிலேயே விலைமதிப்பற்ற தியாகம் மற்றும் பலர் அதைச் செய்யத் துணிய மாட்டார்கள். மற்றவர்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை நடத்தும் அதேவேளை நீங்கள் இப்போது உங்கள் அன்புக்குரியவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து விலகி நிரந்தரமாக படுக்கையில் இருக்கிறீர்கள், ஏனெனில் உங்கள் அன்புக்குரியவர்கள் உங்கள் இயலாமையை வீட்டிலேயே சமாளிக்க முடியாது. ஆனால், இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மையான நேர்மையான எண்ணம் கொண்ட, நன்றியுள்ள மக்களை நினைவில் வையுங்கள், எங்கள் முன்னோர்களின் இந்த மண்ணில் நீடித்த அமைதியைக் கொண்டு வந்த உங்கள் ஈடு இணையற்ற போராட்ட குணங்களின் நினைவுகளைப் பொக்கிஷமாக வைப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றும் வீரர்களிடம் கூறினார்.

“உங்களுக்குத் தெரியும், குறுகிய நினைவுகளைக் கொண்ட சில குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள் உங்களில் சிலரை மறந்து புறக்கணிக்கிறார்கள், உங்கள் இரத்தத்தாலும் வியர்வையாலும் இந்த நாட்டிற்கு நீங்கள் சாதித்ததை இழிவுபடுத்துகிறார்கள், இருப்பினும் எங்கள் தன்னலமற்ற தியாகங்கள் மற்றும் திறமைகளை நிரூபித்த பின்னர் குறித்த வெற்றியினை உறிமைகொண்டாட ஆயிரக்கணக்கானவர்கள் உள்ளனர். 30 வருட கால பயங்கரவாத அச்சுறுத்தலில் அடுத்த தலைமுறையினரையும் பிறக்கப்போகும் எமது தலைமுறையினரையும் விடுபட நீங்கள் அனைவரும் விரும்பினீர்கள், எமது வீரம் மிக்க முப்படையினர் அனைவரும் இலங்கையர்களுடன் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் நின்று இலங்கையின் உச்சகட்ட பாதையை வகுத்துள்ளீர்கள். இன்றும் கூட, வெள்ளம், பேரழிவுகள் போன்ற தேசிய அவசரநிலைகள் நம்மைத் தாக்கும் போது, சில நிமிடங்களிலேயே நம் சிப்பாய்கள் அங்கு வந்து விடுகிறோம். சமீபத்தில் ஏற்பட்ட கொவிட் 19 தொற்றுநோய்க்கு எதிராக எங்கள் சிப்பாய்கள் எவ்வாறு பங்களித்தன என்பதைப் பாருங்கள். கொவிட் 19 தொற்றுநோய் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட ஏற்பாடுகள் மற்றும் பிற தேவைகள் போன்றவை எவ்வாறு வழங்கப்பட்டன மற்றும் தேசிய நிகழ்ச்சி நிரல் சில மணிநேரங்களில் அல்லது சில நாட்களில் செயல்படுத்தப்பட்டது” என்று இராணுவத் தளபதி ‘அபிமன்சல’ போர் வீரர்களுடனான உரையாடலின் போது இவ்வாரான விடயங்களை சுட்டிக்காட்டினார்.

மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க, புனர்வாழ்வு பணிப்பாளர் பிரிகேடியர் ஷிரான் ஏக்கநாயக்க, அனுராதபுரம் அபிமன்சல தளபதி பிரிகேடியர் ஜீவன் குணரத்ன, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் பலரும் இந்த விஜயத்தில் கலந்துகொண்டனர்.

இலங்கை இராணுவம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.