சாலையில் சென்ற போது தீ பற்றி எரிந்த 3 கார்கள்..! இது தான் காரணம்..! உஷார்…!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக எலெக்ட்ரிக் பைக்குகள் தீ பற்றி எரிந்துவந்த நிலையில், ஒரே நாளில் 3 கார்கள் எரிந்து சாம்பலான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காருக்குள் எக்ஸ்ட்ரா வயரிங் செய்வதால் நிகழும் விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

தமிழகத்தில் ஒரே நாளில் 3 கார்கள் தீப்பற்றி எரிந்த நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. 1999ஆம் ஆண்டு மாடல் அம்பாசிடர் கார் ஒன்று உளுந்தூர்பேட்டை புறவழி சாலையில் வந்தபோது திடீரென கொழுந்துவிட்டு எரிந்தது.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருவண்ணாமலையில் இருந்து சென்னை கொருக்குப்பேட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த பழைய மாருதி கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது.

விரைந்து வந்த மறைமலைநகர் தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதே போல திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான டாடா இண்டிகா கார் திருச்சி – கரூர் புற வழிச் சாலையில் தீப்பிடித்து எரிந்தது. இந்த 3 விபத்திலும் காரில் பயணித்தவர்கள் உயிர் தப்பினர்.

கார்கள் தீப்பற்றி எரிவது குறித்து சென்னையை சேர்ந்த கார் பழுது நீக்குனரான சங்கர் கூறும் போது, கார்களை கண்ட இடத்தில் நிறுத்திச் செல்வதால், காரின் முன்பகுதியில் புகும் எலிகள் வயர்களை கடித்து வைப்பதாலும், கோடை காலத்தில் இயல்பை விட ரேடியேட்டர் காற்றாடியில் அதிக அளவு வெப்பக்காற்று வீசுவதாலும் வயர்கள் உருகி தீப்பற்றிக் கொள்ளும் விபரீதம் நிகழ்வதாக தெரிவித்தார்.

அதே போல தாங்கள் வைத்திருக்கும் பழைய கார்களில், செல்போன் சார்ஜிங் பாயிண்ட், கூடுதல் ஸ்பீக்கர்ஸ், அதிக ஒலி எழுப்பும் ஹாரன், அதிக வெளிச்சத்தை கொடுக்கும் கூடுதல் முகப்பு விளக்குகள் என எக்ட்ரா அக்சசரீஸ் பொறுத்தும் போது, அதற்காக போதிய பாதுகாப்பின்றி செய்யப்படும் மின்சாதான வயரிங்கும் இந்த தீவிபத்துக்கு கூடுதல் காரணமாக இருப்பதாக சுட்டிக்காட்டுகிறார் சங்கர்

தொலை தூரம் பயணிக்கும் வாகன ஓட்டிகள் தங்கள் காரின் முன்பக்க பேனட்டை தினமும் திறந்து பார்த்து , முறையாக பராமரித்து வயர்களும், வயரிங்கும், கூலிங் ஆயிலும் சரியாக உள்ளதா ? என்பதை சரிபார்த்துக் கொள்வது இது போன்ற விபரீதங்கள் வரும் முன் தடுக்க உதவும்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.