இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றன.
கடந்த அமர்வில் அமெரிக்க பத்திர சந்தைகள் ஏற்றம் கண்டதையடுத்து, அமெரிக்க சந்தையானது சரிவில் முடிவடைந்தது. இதற்கிடையில் இன்று தொடக்கத்தில் ஆசிய சந்தைகள் பலவும் ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றன.
இது சீனாவின் வேகமாக பரவி வரும் கொரோனாவினால் பொருளாதாரம் வளர்ச்சியானது, மெதுவான வளர்ச்சி காணலாம் என்ற மதிப்பீடுகள் வெளியாகி வருகின்றன.
முதல் நாளே 1400 புள்ளிகளுக்கு மேல் காலி செய்த சென்செக்ஸ்.. கண்ணீர் வடிக்கும் முதலீட்டாளர்கள்..!

கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள்
மேலும் இது ரஷ்யா – உக்ரை பிரச்சனை, பலவீனமான பொருளாதார வளர்ச்சி, மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள கொரோனா, பல நிறுவனங்களின் காலாண்டு அறிக்கை, 20 வருட குறைந்த மதிப்பினை தொட்ட யென், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு சீனாவின் நிதி உதவி அறிவிப்பு, 2 வருட உச்சத்தில் உள்ள டாலரின் மதிப்பு என பலவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன.

முதலீடுகள் வெளியேற்றம்
ஏப்ரல் 18 நிலவரப்படி, 6,387.45 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை அன்னிய முதலீட்டாளர்கள் விற்று வெளியேறியுள்ளனர். அதேசமயம் உள்நாட்டு முதலீட்டாளர்கள், 3341.96 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர் என என்.எஸ்.இ தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

தொடக்கம் எப்படி?
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சென்செக்ஸ் 225.50 புள்ளிகள் அல்லது 0.39% அதிகரித்து, 57,392.24 புள்ளிகளாகவும், நிஃப்டி 36.50 புள்ளிகள் அதிகரித்து, 17,210.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 269.23 புள்ளிகள் அல்லது 0.47% அதிகரித்து, 57,435.97 புள்ளிகளாகவும், நிஃப்டி 92.80 புள்ளிகள் அதிகரித்து, 17,266.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 1687 பங்குகள் ஏற்றத்திலும், 328 பங்குகள் சரிவிலும், 65 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

இன்டெக்ஸ் நிலவரம்
சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சரிவிலேயே காணப்படுகின்றன. இதி பிஎஸ்இ சென்செக்ஸ், பேங்க் நிஃப்டி, நிஃப்டி ஐடி, பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ், பிஎஸ்இ டெக் உள்ளிட்ட குறியீடுகள் சரிவிலும், மற்ற குறியீடுகள் ஏற்றத்திலும் காணப்படுகின்றன. எனினும் எல்லா குறியீடுகளும் பெரியளவில் மாற்றமின்றி 1% குள்ளாகவே காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், கோல் இந்தியா, ஈச்சர் மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், பிபிசிஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்.டி.எஃப்.சி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, இன்ஃபோசிஸ், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், டிவிஸ் லேப்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாடா ஸ்டீல், ரிலையன்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்.டி.எஃப்.சி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, இன்ஃபோசிஸ், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், லார்சன் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

தற்போதைய நிலவரம்
10.06 மணி நிலவரப்படி, தற்போது சென்செக்ஸ் 4.09 புள்ளிகள் அதிகரித்து, 57,170.83 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 22.55 புள்ளிகள் அதிகரித்து, 17,196.20 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
opening bell: indices trade flat amid volatility, Focus on auto, metal, oil & gas stocks
opening bell: indices trade flat amid volatility, Focus on auto, metal, oil & gas stocks/காளையா? கரடியா? குழப்பத்தில் முதலீட்டாளர்கள்.. மாற்றமின்றி காணப்படும் சென்செக்ஸ், நிஃப்டி..!