பிரகாஷ் ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய வெப் சீரிஸ் பற்றிய அப்டேட் வெளியிடு…!

இந்திய திரை உலகின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவரான நடிகர்
பிரகாஷ்ராஜ்
தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் பல திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களிலும் மிக முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளார். அந்த வகையில்ஏப்ரல் 14ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனகேஜிஎப் சாப்டர் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகியிருக்கும்
பொன்னியின் செல்வன்
படத்தில் சுந்தரசோழர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரகாஷ்ராஜ் தனுஷின்
திருச்சிற்றம்பலம்
, கார்த்தியின் விருமன், மகேஷ்பாபுவின் சர்காரு வாரி பாட்டா உள்ளிட்ட படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வயசுல தேவையா தலைவரே?: ரஜினி ரசிகர்கள் கவலை

இந்த வரிசையில் அடுத்ததாக பிரகாஷ்ராஜ் நடிப்பில் தயாராகியுள்ள வெப்சீரிஸ் அனந்தம். கண்ட நாள் முதல் படத்தின் இயக்குனர் V.பிரியா இயக்கத்தில் உருவாகியிருக்கும்
அனந்தம்
வெப் சீரிஸில்
விவேக் பிரசன்னா
, ஜான் விஜய், விவேக் ராஜகோபால், இந்துஜா, பிக்பாஸ் சம்யுக்தா, அஞ்சலி ராவ், மிர்னா மேனன், சம்பத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஆனந்தம்
1951 என குறிப்பிடப்பட்டிருக்கும் வீட்டை மையப்படுத்தி உறவுகளுக்கு மத்தியிலான எமோஷனலான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த அனந்தம் வெப்சீரிஸ் வருகிற
ஏப்ரல்
22-ஆம் தேதி முதல் ஜீ5 OTT தளத்தில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் அனந்தம் குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நேற்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.