சென்னைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Madras University recruitment 2022 for Assistant Professor jobs apply soon: சென்னைப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 23 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

உதவிப் பேராசிரியர் (Assistant Professor)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 23

பாட வாரியாக காலியிட விவரம்

தமிழ் (Tamil) – 1

ஆங்கிலம் (English) – 2

பொருளாதாரம் (Economics) – 1

அரசியல் அறிவியல் மற்றும் நிர்வாகம் (Political Science & Public Administration) – 1

வணிகவியல் (Commerce) – 1

உளவியல் (Psychology) – 2

கணினி அறிவியல் (Computer Science) – 1

மேலாண்மை படிப்புகள் (Management Studies) – 2

இசை (Music) – 2

ப்ரெஞ்ச் (French) – 1

இதழியல் (Journalism) – 2

சமஸ்கிருதம் (Sanskrit) – 1

சைவ சித்தாந்தம் (Saiva Siddhantha) – 1

புவியியல் (Geography (B.Sc & M.Sc)) – 2

சமூகவியல் (Sociology (BA & MA)) – 2

கிறிஸ்தவ படிப்புகள் (Christian Studies) – 1

கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டமும் பி.ஹெச்.டியும் முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.30,000

தேர்வு செய்யப்படும் முறை : சம்பந்தப்பட்ட படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வு அடிப்படையில் பணி வழங்கப்படும்.

இதையும் படியுங்கள்: TNPSC Exam: இந்த மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டிய 4 தேர்வுகள்; தகுதிகள் என்ன?

விண்ணப்பிக்கும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.unom.ac.in/webportal/uploads/appointments/ide_notification_20220412114209_56980.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : The Registrar, University of Madras, Chepauk, Chennai 600 005

விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.04.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.unom.ac.in/webportal/uploads/appointments/ide_notification_20220412114209_56980.pdf என்ற இணையதளப் பக்கத்தினை பார்வையிடவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.