தெருவின் பெயரை ‘போரிஸ் ஜான்சன்’ என மாற்றிய உக்ரைன்! அதிர்ச்சியில் ரஷ்யா


பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சனை கௌரவிக்கும் வகையில் உக்ரைன் Odesa-வில் உள்ள தெருவுக்கு அவரின் பெயரை சூட்டியுள்ளது.

Mayakovsky தெருவை போரிஸ் ஜான்சன் தெரு என பெயர் மாற்ற Odesa-வில் உள்ள Fontanka கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரஷ்ய படையெடுப்பை எதிர்த்த முக்கியமானவர்களில் பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் ஒருவர், ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து, உக்ரைனுக்கு பாதுகாப்பு ஆதரவு வழங்கிய தலைவர் என Fontanka கவுன்சில் புகழ்ந்துள்ளது.

இந்த அறிவிப்பை இணையதளத்தில் கவுன்சில் அறிவித்தது.

முன்னதாக இந்த தெருவுக்கு பிரபல சோவியத் கவிஞரும் நாடக ஆசிரியருமான விளாடிமிர் மாயகோவ்ஸ்கியின் பெயர் வைக்கபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தெருவுக்கு சோவியட் கவிஞரின் பெயருக்கு பதிலாக போரிஸ் ஜான்சன் பெயரை உக்ரைன் மாற்றியுள்ளது ரஷ்யாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உக்ரைனுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்த பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன், சமீபத்தில் திடீரென எந்தவித முன்னறிவிப்பின்றி உக்ரைன் தலைநகர் கீவ் பயணித்து, அந்நாட்டு ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை சந்தித்தார்.

இதைத்தொடர்ந்து, இருவரும் கீவ் சாலைகளில் நடந்து சென்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியானது.

அதுமட்டுமின்றி, உக்ரைனுக்கு 450 மில்லியன் பவுண்டுகள் ஆயுதங்கள் மற்றும் 400 மில்லியன் பவுண்டுகள் உதவி வழங்குவதாக போரிஸ் ஜான்சன் உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.