பதவி விலகுகிறார் இலங்கை அதிபர்.. மக்கள் எழுச்சிக்கு பணிந்தார் ராஜபட்ச !!

தான் பதவி விலகத் தயார் என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருள்களின் விலை எதிர்பாராத வகையில் உயர்ந்துள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். இலங்கை தமிழ் மக்கள் பலரும் படகு மூலம் தமிழகம் நோக்கி வந்தவண்ணம் உள்ளனர். 

இதனிடையே, இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபட்ச பதவி விலகக்கோரி தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்ததொடங்கியுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர்களும் இதனைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது முதலே அங்கு அரசியல் பிரச்னைகளும் இருந்து வருகின்றன. 

rajapakse kottapaya

இந்நிலையில், கட்சித் தலைவர்கள் அனைவரும் கேட்டுக்கொண்டால், தான் பதவி விலகத் தயார் என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச நாடாளுமன்ற சபாநாயகரிடம் கூறியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தகவல் தெரிவித்துள்ளார்.

‘இலங்கையில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒன்றிணைந்து ராஜிநாமா செய்ய வலியுறுத்தினால் பதவி விலகத் தயாராக இருப்பதாக அவைத் தலைவர் மஹிந்த அபேவர்தன-விடம் அதிபர் கூறியுள்ளார். கட்சித் தலைவர்கள் அனைவரும் அதற்கு தயாராக இருக்கிறோம். எங்களது இந்த கோரிக்கையை அதிபரிடம் தெரிவிக்க வாய்ப்பு வழங்க அவைத் தலைவரிடம் கோரிக்கை வைக்கிறேன், என்று நாடாளுமன்றத்தில் சஜித் பிரேமதாச கூறியுள்ளார். 

rajapakse kottapaya

மேலும், இலங்கையின் ரம்பக்கனையில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்தும் கண்டனம் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய விசாரணைக் குழு விசாரிக்க வேண்டும், என்றும் வலியுறுத்தினார். 

முன்னதாக, நேற்று ரம்பக்கனையில் இலங்கை அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் போராட்டக்காரர்களை கலைக்க காவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கு ஐ.நா. மற்றும் உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 

இந்த சம்பவத்தைக் கண்டித்தும் அதிபர் பதவி விலகக்கோரியும் இலங்கையில் ஒரு வாரத்திற்கு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. 

newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.