விஜய் சேதுபதிக்கு இப்படியொரு நிலைமையா.?: அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர்
விஜய் சேதுபதி
. தமிழ் மட்டும் இல்லாமல் இந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். திரையிலகில் முன்னணி நடிகராக திகழ்ந்தாலும் கதாநாயகனாக மட்டுமல்லாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதி நடிப்பில்
மாமனிதன்
, யாதும் ஊரே யாவரும் கேளீர் படங்கள் வெளியாக உள்ளன. இதனிடையில் சூரியை வைத்து வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’ படத்திலும் நடித்து முடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதி நடிப்பில்
வெங்கடகிருஷ்ணன் ரோக்நாத்
இயக்கத்தில் உருவாகிய ’
யாதும் ஊரே யாவரும் கேளிர்
’ படத்தின் புதிய போஸ்டர் ஒன்று கடந்த தீபாவளிக்கு வெளியானது. இந்த படம் ரிலீசுக்கு தயாராகி ஒரு சில ஆண்டுகள் ஆகிய நிலையில் கடந்த டிசம்பர் மாதம் படம் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்தனர்.

Vijay: ‘பீஸ்ட்’ படம் சொதப்பியதுக்கான காரணம் இதுதான்.. வெளியான பகீர் தகவல்.!

இந்நிலையில் இந்தப்படத்தின் எந்த ஏரியாவும் இதுவரை பிசினஸ் ஆகாததால் இன்னும் படம் வெளியாகவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சேட்டிலைட் மற்றும் தியேட்டர் உரிமைகள் எதுவும் ஒப்பந்தமாகததால் படம் வெளியாகாமல் சிக்கலில் இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதியின் படம் விற்பனை ஆகாமல் உள்ளது என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் சேதுபதி,
மேகா ஆகாஷ்
, மகிழ்திருமேனி, விவேக், ரித்விகா, மோகன்ராஜா, கரு பழனியப்பன், சின்னி ஜெயந்த், வித்யா பிரதீப் உள்பட பலர் நடித்துள்ள இந்தப்படத்தை இசக்கி துரை தயாரித்துள்ளார். நிவாஸ் பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள குறிப்பிடத்தக்கது.

“நடிப்பு அரக்கன் விஜய் சேதுபதி” “என்னோட சிங்ககுட்டி யுவன்” ஆர் கே சுரேஷ்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.