காளையின் பிடியில் சந்தை.. சென்செக்ஸ் மீண்டும் தொடர் ஏற்றம்..முதலீட்டாளர்கள் ஹேப்பி!

இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்று, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.

கடந்த அமர்வில் அமெரிக்க சந்தையானது ஏற்ற இறக்கத்தில் முடிவடைந்த நிலையில், இன்று ஆசிய சந்தைகள் பலவும் ஏற்றத்திலேயே தொடங்கியுள்ளன. இதன் எதிரொலியாக இந்திய சந்தையும் ஏற்றத்திலேயே காணப்படுகின்றது.

இன்போசிஸ் போட்ட புதிய கண்டிஷன்.. ஊழியர்கள் ஷாக்..!!

ரூபாய் நிலவரம்

ரூபாய் நிலவரம்

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 9 பைசா குறைந்து, 76.29 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது கடந்த அமர்வில் 76.20 ரூபாயாக முடிவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அன்னிய முதலீடுகள் வரத்தானது சந்தையில் சற்று குறைந்து வந்தாலும், உள் நாட்டு முதலீட்டாளர்களின் பங்கானது அதிகரித்துள்ளது. மேலும் ரூபாயின் மதிப்புக்கு சாதகமாக கச்சா எண்ணெய் விலையும் சற்று குறைந்துள்ளது. எனினும் உக்ரைன் பதற்றம், பணவீக்கம், அமெரிக்காவின் வட்டி விகித நடவடிக்கை என பலவும் சந்தைக்கு சாதகமாக அமையலாம்.

தொடக்கம் எப்படி?

தொடக்கம் எப்படி?

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சென்செக்ஸ் 96.18 புள்ளிகள் அல்லது 0.17% அதிகரித்து, 57,133.68 புள்ளிகளாகவும், நிஃப்டி 8.90 புள்ளிகள் குறைந்து, 17,127.60 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 358.86 புள்ளிகள் அல்லது 0.63% அதிகரித்து, 57,396.36 புள்ளிகளாகவும், நிஃப்டி 105.60 புள்ளிகள் அதிகரித்து, 17,242.10 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 1627 பங்குகள் ஏற்றத்திலும், 323 பங்குகள் சரிவிலும், 54 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

இன்டெக்ஸ் நிலவரம்
 

இன்டெக்ஸ் நிலவரம்

சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள பிஎஸ்இ மெட்டல்ஸ் தவிர, மற்ற அனைத்து குறியீடுகளுமே ஏற்றத்திலேயே காணப்படுகின்றன. எனினும் இது பெரியளவில் மாற்றம் காணவில்லை. இதில் பிஎஸ்இ ஸ்மால் கேப் தவிர மற்ற அனைத்து குறியீடுகளும் 1% கீழாகவே ஏற்றத்தில் காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீட்டில் உள்ள கோல் இந்தியா, ரிலையன்ஸ், இந்தஸ்இந்த் வங்கி, ஐடிசி, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டாடா ஸ்டீல், நெஸ்டில், ஹிண்டால்கோ, பஜாஜ் ஆட்டோ, ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ரிலையன்ஸ், ஐடிசி, இந்தஸ்இந்த் வங்கி, சன் பார்மா, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே நெஸ்டில், டாடா ஸ்டீல், டெக் மகேந்திரா, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

 தற்போதைய நிலவரம்

தற்போதைய நிலவரம்

9.56 மணி நிலவரப்படி, தற்போது சென்செக்ஸ் 411.70 புள்ளிகள் அதிகரித்து, 57,445.29 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 113.6 புள்ளிகள் அதிகரித்து, 17,250.15 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

opening bell: indices opened higher on April 21; focus in HCL, Tata elxsi, atul auto

opening bell: indices opened higher on April 21; focus in HCL, Tata elxsi, atul auto / காளையின் பிடியில் சந்தை.. சென்செக்ஸ் மீண்டும் தொடர் ஏற்றம்..முதலீட்டாளார்கள் ஹேப்பி!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.