டாடா திடீர் முடிவு.. வெளிநாட்டு வர்த்தகத்தில் இருந்து வெளியேற்றம்.. என்ன காரணம்..?!

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்கும் டாடா பல துறையில் வேகமாக வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வந்தாலும், பல பிரிவுகளில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து செய்து வருகிறது.

இதனால் மந்தமான வர்த்தகம், நஷ்டத்தில் இயங்கும் வர்த்தகங்கள், முதலீடு இல்லாமல் தவிக்கும் சிறிய வர்த்தகப் பிரிவு, நிர்வாகம் சரியாக இல்லாத பிரிவு எனப் பல பிரச்சனைகளைச் சரி செய்ய முடியும். அந்த வகையில் டாடா குழுமம் தற்போது மிகவும் முக்கியமான முடிவை எடுத்துள்ளது.

இலங்கையை காப்பாற்றும் இந்தியா.. கடைசியில் கடன் கொடுக்க தயாரான சீனா..!

 டாடா குழுமம்

டாடா குழுமம்

டாடா குழும நிறுவனங்கள் வெளிநாட்டில் இருக்கும் சிறிய அளவிலான வர்த்தகம் மற்றும் துணை நிறுவனங்கள் வாயிலாகச் செய்யும் வர்த்தகத்தில் இருந்து படிப்படியாக வெளியேறி முடிவு செய்துள்ளதாகவும், மொத்த கவனத்தையும் இந்தியச் சந்தை மீது திருப்பவும் முடிவு செய்துள்ளதாக டாடா குழுமத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 லாபகரமான வர்த்தகம்

லாபகரமான வர்த்தகம்

இதேபோல் வெளிநாட்டில் லாபத்தில் இயங்கும் வர்த்தகத்தில் எவ்விதமான மாற்றத்தை செய்யாமல், நஷ்டத்தில் இயங்கும் வர்த்தகத்தில் இருந்து மட்டுமே வெளியேற அனுமதிக்கப்பட்டு உள்ளது.

இந்திய வர்த்தகம்
 

இந்திய வர்த்தகம்

இதன் மூலம் இந்திய வர்த்தகத்தில் அதிகப்படியான கவனத்தையும், தேவையான முதலீட்டைச் சிறப்பான முறையில் முதலீடு செய்து அதிகப்படியான வளர்ச்சியைப் பதிவு செய்ய முடியும் என அறிவுறுத்தப்பட்டு

புதிய முதலீடுகள்

புதிய முதலீடுகள்

இதேபோல் வெளிநாட்டு வர்த்தகத்தில் புதிய முதலீடு செய்ய வேண்டும் என்றாலும் தீவிரமான ஆலோசனைக்குப் பின்பு தேர்ந்தெடுத்து, அதிகப்படியான வளர்ச்சி வாய்ப்புகள் இருந்தால் மட்டுமே முதலீடு செய்யப்பட முடிவு செய்துள்ளது டாடா குழுமம்.

 முக்கிய நிறுவனங்கள்

முக்கிய நிறுவனங்கள்

கடந்த சில மாதங்களாக டாட கன்ஸ்யூமர், டாடா பவர், டாடா ஸ்டீல் ஆகிய முன்னணி நிறுவனங்களின் வெளிநாட்டு வர்த்தகத்தில் அடுத்தடுத்து சிறிய வர்த்தகங்களை இணைப்பு அல்லது விற்பனை செய்வதில் தீவிரமாக உள்ளது.

இந்தியா தான் டார்கெட்

இந்தியா தான் டார்கெட்

மேலும் டாடா குழுமத்தின் குரூப் சிஇஓ-க்கள் அனைவரும் இந்திய சந்தையில் அதிகப்படியான வர்த்தக வளர்ச்சி இருக்கும் காரணத்தால் வெளிநாட்டு சிறிய வர்த்தகத்தை விட்டு விட்டு இந்தியச் சந்தை மீது கவனத்தைத் திருப்பியுள்ளனர்.

தலையாய மந்திரம்

தலையாய மந்திரம்

இந்நிலையில் டாடா குழுமத்தின் தலையாய மந்திரமாகத் தற்போது இருப்பது ஒன்று தான், இனி எந்த முதலீடாக இருந்தாலும், இந்தியாவில் முதலீடு செய்வது தான். அடடே இது சீல்லறை முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் ஆச்சே..

வர்த்தக வெளியேற்றம்

வர்த்தக வெளியேற்றம்

டாடா கன்ஸ்யூமர் கடந்த வருடம் ஹேரிஸ் டீ நிறுவனத்தில் இருந்த இரு அமெரிக்க நிறுவன கூட்டணிகளில் இருந்து வெளியேறியது, ஆஸ்திரேலியாவில் Buccheri Group உடன் இருந்த காஃபி வர்த்தகத்தில் இருந்து வெளியேறியது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Tata exiting loss making international business; India business is primary

Tata exiting loss making international business; India business is primary டாடா திடீர் முடிவு.. வெளிநாட்டு வர்த்தகத்தில் இருந்து வெளியேற்றம்.. என்ன காரணம்..?!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.