பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் பயணம்; இந்தியா கண்டனம்

‘Narrow-minded politics’: India condemns US Congresswoman Ilhan Omar’s visit to PoK: அமெரிக்க காங்கிரஸின் பெண் உறுப்பினர் இல்ஹான் ஓமர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு (PoK) பயணம் செய்தநிலையில், ​​இந்தியா வியாழன் அன்று அவரின் இந்த பயணத்திற்கு கண்டனம் தெரிவித்தது. மேலும், இது அவரது “குறுகிய எண்ணம் கொண்ட அரசியல்” என்று அழைத்ததோடு, “பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை” மீறுவதாக உள்ளதாகவும் இந்தியா கூறியது.

ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 24 வரை நான்கு நாள் பயணமாக பாகிஸ்தானுக்கு சென்ற இல்ஹான் ஒமர், அங்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆகியோரை சந்தித்தார். பின்னர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு பயணம் செய்தார்.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், “தற்போது பாகிஸ்தானால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் இந்திய யூனியன் பிரதேசத்தின் ஒரு பகுதியை அமெரிக்க பிரதிநிதி இல்ஹான் ஓமர் பார்வையிட்டதை நாம் கவனத்தில் எடுத்துள்ளோம். அத்தகைய அரசியல்வாதி தனது குறுகிய மனப்பான்மை கொண்ட அரசியலை செய்ய விரும்பினால், அது அவருடைய விருப்பம். ஆனால் அதன் நோக்கத்தில் நமது பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை மீறுவது அதை நம்முடையதாக ஆக்குகிறது. இந்த வருகை கண்டிக்கத்தக்கது” என்றார்.

இதையும் படியுங்கள்: டெல்லி ரகசியம்: வொர்க் ஃப்ரம் ஹோம் ஓவர்… உள் துறை அமைச்சகத்தில் பிஸியான அமித் ஷா

இந்த மாத தொடக்கத்தில், மனித உரிமைகள் பிரச்சினையில் மோடி அரசாங்கத்தை விமர்சிக்க பிடன் நிர்வாகம் ஏன் இவ்வளவு தயங்குகிறது என்று ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரும் அமெரிக்க காங்கிரஸ் பெண் உறுப்பினருமான ஒமர் கேள்வி எழுப்பினார். இதற்கு முன்னர், முஸ்லிம்களுக்கு எதிரான கொள்கையை இந்தியா கடைப்பிடிப்பதாகவும் ஒமர் குற்றம் சாட்டியிருந்தார்.

ஜம்மு காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க வெளியுறவுக் குழு முன்பு விசாரணை நடத்தியதாகவும், இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான பேச்சுக்கள் மற்றும் அதன் விளைவுகள் குறித்தும் விவாதித்ததாகவும் முசாபராபாத்தில் அமெரிக்க காங்கிரஸ் பெண் உறுப்பினர் கூறினார்.

இஸ்லாமாபாத்தில் அரசியல் தலைமைகளுடனான சந்திப்புகளைத் தவிர, பாகிஸ்தானுக்கான தனது நான்கு நாள் பயணமாக அவர் லாகூர் செல்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.