ரஷ்யா ,இந்தியாவிடமிருந்து மருத்து உபகரணங்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம்

இந்தியாவிடமிருந்து மருத்து உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு ரஷ்யா தீர்மானித்துள்ளது.

இந்தியாவில் மருத்துவ உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுடன் ரஷ்ய அதிகாரிகள் இது பற்றி எதிர்வரும் 22 ஆம் திகதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இதனால் அந்த நாட்டின் வணிகம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா மற்றும் சீனாவிலிருந்து மருத்துவ உபகரணங்களின் இறக்குமதியும் ரஷ்யாவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்தியாவிடமிருந்து மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு ரஷ்யா தீர்மானித்துள்ளது.

இதேவேளை,மீதான தாக்குதலை தொடங்கிய பிறகு அமெரிக்கா , கனடா , ஐரோப்பிய நாடுகள் உட்பட பல உலக நாடுகளின் பொருளாதார தடைகள் ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் நடக்கும் போரின் காரணமாக ரஷ்யாவை தனிமைப்படுத்த பல பொருளாதார தடைகளை விதித்த பின்னரும், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் ரஷ்ய கச்சா எண்ணெயை அதிக அளவில் வாங்குவதாக இந்தியா விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்த உள்ளூர் நாணயங்களில் பணம் செலுத்தும் முறையை ரஷ்யா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் உருவாக்குவதால், ரஷ்யாவிற்கான ஏற்றுமதியை அதிகரிக்கலாம் என இந்தியா நம்புகிறது. தற்போது, ரஷ்ய சந்தையில் இந்தியாவின் பங்களிப்பு குறைவாக இருந்தாலும், இந்த ஆண்டு ரஷ்யாவுக்கான ஏற்றுமதியை 10 மடங்கு அதிகரித்து 2 பில்லியன் ரூபாயாக ($26.2 மில்லியன்) உயர்த்தலாம் என இந்தியா திட்டமிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.