ஜேர்மன் குடியுரிமைக்காக ஆவலுடன் காத்திருப்போருக்கு நல்ல செய்தி கிடைக்கப்போவது எப்போது?



குடியுரிமைச் சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாக கடந்த நவம்பரில் ஜேர்மனி அறிவித்தபோது, அமெரிக்கர்கள், இந்தியர்கள் மற்றும் அவுஸ்திரேலியர்கள், தங்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய குடியுரிமை கிடைக்கப்போகிறது என்று நம்பி புளகாங்கிதம் அடைந்தார்கள்.

கூடவே, பிரித்தானியர்களும், தங்கள் சொந்த நாட்டின் குடியுரிமையை விட்டுக் கொடுக்க விரும்பாத துருக்கி நாட்டிலிருந்து பணியாற்ற வந்த கூட்டத்தைச் சேர்ந்தவர்களும் தங்களுக்கு கூடுதலாக ஐரோப்பிய ஒன்றிய குடியுரிமையும் கிடைக்கப்போவதாக எண்ணி மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனால், இதுவரை அந்த சட்ட மாற்றம் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை!

அந்த சட்ட மாற்றம் எப்போது நிகழப்போகிறது?

இது குறித்து ஜேர்மனியில் ஆட்சிக்கு வந்துள்ள கூட்டணி அரசின் செய்தித்தொடர்பாளர்களிடம் கேட்டபோது, தங்கள் அரசு நிறைவேற்றப் போகும் திட்டங்களில் முதலிடத்தில் இருப்பது இந்த இரட்டைக் குடியுரிமை சட்டம்தான் என்று கூறியுள்ளார்கள்.

கிரீன்ஸ் கட்சியினரின் செய்தித்தொடர்பாளர் கூறும்போது, தாங்கள் அந்த சட்டத்தை முதல் பெரிய திட்டங்களில் ஒன்றாக அமுல்படுத்த தங்கள் கூட்டணியுடன் இணைந்து பெடரல் உள்துறை அமைச்சரான Nancy Faeserஐ ஊக்குவிக்க இருப்பதாக தெரிவித்தார்.

பொதுவாக, ஒரு சட்டத்தை உருவாக்கவேண்டுமானால், அதன் சட்ட வரைவை உருவாக்கவே சில மாதங்கள் பிடிக்கும். அதன் பிறகு அது நாடாளுமன்றத்தின் மேலவை மற்றும் கீழவைகளில் வாக்கெடுப்புக்குக் கொண்டு செல்லப்படும். இருந்தாலும், இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டுக்குள்ளாக அந்த சட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக நடவடிக்கை எடுப்பது சாத்தியமே.

ஒரே பிரச்சினை என்னவாக இருக்கும் என்றால், விதிகள் மாறியதும், குடியுரிமை அலுவலகங்களில் விண்ணப்பங்கள் குவிவதை தவிர்ப்பது எப்படி என்பதுதான். ஜேர்மனியில் சுமார் 11 மில்லியன் பேர் ஜேர்மன் குடியுரிமை இல்லாமலே வாழ்ந்து வரும் நிலையில், அவர்களில் பாதிபேர் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடிவு செய்தால் கூட, விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுப்பதில் தாமதத்தை உருவாக்கிவிடக்கூடும்.

அதைத் தவிர்ப்பதற்காக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது தெரியவில்லை. மற்றபடி குடியுரிமைச் சட்டத்தில் மாற்றங்கள் செய்வது குறித்த அறிவிப்புகள் வெளியானால், அவை குறித்த செய்திகளை உங்களுக்குத் தெரிவிக்க தயாராக இருக்கிறோம்.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.