தனுஷுக்கு தொடரும் சிக்கல்.. கதிரேசன் தம்பதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சீராய்வு மனு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர்
தனுஷ்
. இவர் தங்களின் மகன் என்றும் கடந்த 2002ஆம் ஆண்டு அவர் தங்களை பிரிந்து சென்றதாகவும் மேலூரை சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதியினர் மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

தனுஷ் தங்களுக்கு மாதம் 65 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டிருந்தனர். இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில்
கதிரேசன்
மீனாட்சி தம்பதி தற்போது சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்

அதில், ‘ கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி, நடிகர் தனுஷ் எனது மகன் எனக்கோரி தொடரப்பட்ட வழக்கில், நடிகர் தனுஷ் தரப்பில், தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் போலியான ஆவணங்கள் இருப்பதாக, நான் அளித்த புகாரின் அடிப்படையில், முறையாக விசாரித்து, இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆவணங்களின் அடிப்படையில் மட்டும் இந்த வழக்கில் முகாந்திரம் இல்லை எனக்கூறி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் நடிகர் தனுஷ், கஸ்தூரி ராஜாவின் மகன் என முடிவுக்கு வரவில்லை. நடிகர் தனுஷ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறப்பு சான்றிதழின் உண்மைத் தன்மையை அறியும் விதமாக, கீழமை நீதிமன்றம் மதுரை மாநகராட்சிக்கு அனுப்பியது.

தோனி ஆட்டத்தை பார்த்து துள்ளிக்குதிக்கும் சூரி… லைக்ஸை அள்ளிக் குவிக்கும் வீடியோ!

இதையடுத்து அதன் முடிவுகள் இதுவரை வழங்கப்படாத நிலையில், அதனை கருத்தில் கொள்ளாமல் நீதித்துறை நடுவர் வழக்கை தள்ளுபடி செய்தது ஏற்கத்தக்கதல்ல. இது தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவில், ‘தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் போலியான ஆவணங்களும் இருப்பதை சுட்டிக்காட்டி உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் முகாந்திரம் இல்லை என நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கூறியிருப்பதை ரத்து செய்து மீண்டும் வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

நான் பிஜேபி கிடையாது; மன்னிப்பு கேட்ட பாக்கியராஜ்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.