பெங்களூர் நிறுவனத்தை கைப்பற்றிய அமேசான்..!

பெண்களை மையமாகக் கொண்ட சோஷியல் காமர்ஸ் வர்த்தக நிறுவனமான GlowRoad என்னும் நிறுவனத்தைக் கைப்பற்றவுதாக அமேசான் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்தியாவில் சோஷியல் காமர்ஸ் வர்த்தகப் பிரிவில் முதல் முறையாக முதலீடு செய்து கைப்பற்றிய நிறுவனமாக க்லோரோடு விளங்குகிறது.

க்லோரோடு கைப்பற்றல் குறித்து முழுமையான தரவுகளை அமேசான் வெளியிடவிட்டாலும், இந்த ஒப்பந்தத்தில் க்லோரோடு நிறுவனம் சுமார் 75 மில்லியன் டாலருக்கு மதிப்பிடப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.

க்லோரோடு

க்லோரோடு சோஷில் காமர்ஸ் நெட்வொர்க் நிறுவனமாகும், இந்நிறுவனம் சுமார் 2,000 நகரங்களில் 20,000 க்கும் மேற்பட்ட பின்கோடுகளில் ரீசெல்லர்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்குத் தங்கள் தயாரிப்புகளை விற்க சப்ளையர்களுக்கு உதவுகிறது.

வர்த்தகக் கட்டமைப்பு

வர்த்தகக் கட்டமைப்பு

க்லோரோடு நிறுவனம் மறுவிற்பனையாளர்கள் மூலம் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் வர்த்தக விரிவாக்கத்தில் கவனம் செலுத்துகிறது. இந்த வர்த்தகத்தை இல்லத்தரசிகள், தற்காலிக தொழிலாளர்கள் அல்லது மாணவர்கள் வாயிலாக வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது. இப்பிரிவில் மீஷோ நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாக உள்ளது.

2017ல் துவக்கம்
 

2017ல் துவக்கம்

க்லோரோடு 2017 இல் சோனல் வர்மா, குணால் சின்ஹா, நிதேஷ் பந்த், சேகர் சாஹு மற்றும் நிலேஷ் பதரியா ஆகியோரால் துவங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் நிறுவனர்கள் சுமார் 50% பங்குகளை வைத்துள்ளனர். இதில் சோனல் வர்மா, குணால் சின்ஹா ஆகியோர் மற்ற நிறுவனர்களில் ஒப்பீட்டளவில் அதிகப் பங்குகளை வைத்துள்ளனர்

31 மில்லியன் டாலர் முதலீடு

31 மில்லியன் டாலர் முதலீடு

கொரியா இன்வெஸ்ட்மென்ட் பார்ட்னர்ஸ், வெர்டெக்ஸ் வென்ச்சர்ஸ், சிடிஹெச் இன்வெஸ்ட்மென்ட்ஸ் மற்றும் ஆர்பி இன்வெஸ்ட்மென்ட்ஸ் போன்ற மார்க்யூ முதலீட்டாளர்களிடமிருந்து இந்நிறுவனம் சுமார் 31 மில்லியன் டாலர் முதலீட்டை திரட்டியுள்ளது. Accel நிறுவனம், க்லோரோடு நிறுவனத்தில் கிட்டத்தட்ட 19% பங்குகளுடன் மிகப்பெரிய பங்குதாரராக உள்ளது.

பெங்களூர்

பெங்களூர்

ஐந்து ஆண்டுகளாகப் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் க்லோரோடு ஸ்டார்ட்அப் கடைசியாக நவம்பர் 2020 இல் 7 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை திரட்டியது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Bengaluru based GlowRoad acquired by Amazon; First in social commerce space

Bengaluru based GlowRoad acquired by Amazon; First in social commerce space பெங்களூர் நிறுவனத்தைக் கைப்பற்றிய அமேசான்..!

Story first published: Friday, April 22, 2022, 21:34 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.