ஹெலிகாப்டராக மாறிய கார்: பீஹார் இளைஞர் அசத்தல்| Dinamalar

பாட்னா: பீஹாரில் இளைஞர் ஒருவர் தன் காரை ஹெலிகாப்டர் போல மாற்றி அமைத்துள்ளார். இதை திருமண நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விட திட்டமிட்டு உள்ளார்.

பீஹாரின் ககாரியா மாவட்டத்தில் வசிக்கும் திவாகர் குமார் என்பவர், தன் சிறிய ரக கார் ஒன்றை, 3.5 லட்சம் ரூபாய் செலவில் ஹெலிகாப்டர் போல மாற்றியமைத்து உள்ளார். ஹெலிகாப்டரில் இருப்பது போன்றே காரின் பின் பகுதியில் நீண்ட வால் அமைத்துள்ளார். இந்தக் காரை திருமண நிகழ்ச்சிக்கு வாடகைக்கு விட திவாகர் திட்டமிட்டுள்ளார்.

இவருக்கு முன், பஹாஹா என்ற இடத்தில் வசிக்கும் ஒருவர், தன் ‘நானோ’ காரை 2 லட்சம் ரூபாய் செலவில் ஹெலிகாப்டர் போலவே மாற்றியமைத்து உள்ளார். அவர், இந்த ஹெலிகாப்டர் காரை திருமண நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விட்டு, ஒரு நாளைக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித்து வருகிறார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.