உக்ரைன் மக்களுக்கு பிரான்ஸ், ஜேர்மனியின் பச்சை துரோகம்: வெளிவரும் பகீர் பின்னணி


உக்ரைன் படையெடுப்புக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படும் இராணுவ தளவாடங்களை பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி நாடுகள் ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்துள்ள பகீர் தகவல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் தரப்பு முன்னெடுத்த ஆய்வில் குறித்த தகவல் அம்பலமாகியுள்ளது.
2014ல் உக்ரைனின் கிரிமியா பகுதி மீது தாக்குதல் முன்னெடுத்து தங்களுக்கு சொந்தம் என உரிமை கொண்டாடும் ரஷ்யாவுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்திருந்தது.

ஆனால், குறுக்குவழியை பயன்படுத்திய பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இத்தாலி உள்ளிட்ட 10 நாடுகள் ஏவுகணை, துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட தளவாடங்களை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளதை கடந்த மாதம் அதிகாரிகள் தரப்பு கண்டறிந்துள்ளனர்.

இதில், 293 மில்லியன் பவுண்டுகள் தொகைக்கு பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்கியுள்ளது.
மட்டுமின்றி, இதில் பெரும்பகுதி, சுமார் 78% அளவுக்கு பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி நிறுவனங்களே ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளன.

இராணுவ தளவாடங்கள் தொடர்பில் ரஷ்யா உடன் எவ்வித ஒப்பந்தமும் கூடாது என உறுப்பு நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் 8 ஆண்டுகளுக்கு முன்னரே தடை விதித்திருந்தது.

ஆனால், 2014 ஆகஸ்டு 1ம் திகதிக்கு முன்னர் ஏற்படுத்திய ஒப்பந்தம் என கூறி, பிரான்ஸ், ஜேர்மனி நாடுகள் தொடர்ந்து ரஷ்யாவுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்து வந்துள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.

பிரான்ஸ் மட்டும், 152 மில்லியன் யூரோ அளவுக்கு ஆயுதங்களை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.
இது ஒருபக்கம் இருக்க, உக்ரைன் மீதான படையெடுப்பு தொடங்கிய பின்னர் எரிபொருளுக்காக நாளும் 1 பில்லியன் யூரோ தொகையை ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவுக்கு அளித்து வந்தது சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது.

மட்டுமின்றி, உக்ரைனுக்கு கனரக ஆயுதங்களை வழங்க ஜேர்மனி மறுத்து வந்தது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
உக்ரைன் மீதான படையெடுப்பு அணு ஆயுத போராக வெடிக்கும் வாய்ப்பினை அது உருவாக்கும் என அஞ்சுவதாக அப்போது ஜேர்மனி விளக்கமளித்தது.

ஆனால், ரஷ்ய ஜனாதிபதி புடினின் கோபத்திற்கு ஆளாகாமல் இருக்கவே, ஜேர்மனி இதுவரை உக்ரைனுக்கு ஆயுதங்கள் அளித்து ஆதரவளிக்கவில்லை என்பதும் அம்பலமாகியுள்ளது.

இருப்பினும் உக்ரைன் தமக்கு தேவையான ஆயுதங்களை வாங்கிக்கொள்ள 830 மில்லியன் பவுண்டுகள் தொகையை ஜேர்மனி அளிக்கும் என சேன்ஸலர் Olaf Scholz உறுதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.