சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இஸ்லாமிய அரசு பாடம் நீக்கம்| Dinamalar

புதுடில்லி : சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம், பிளஸ் ௧ மற்றும் பிளஸ் ௨ வகுப்புக்கான வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பாடப் புத்தகங்களில் இடம் பெற்றிருந்த ‘ஆப்ரிக்க – ஆசிய பகுதிகளில் இஸ்லாமிய அரசுகளின் வளர்ச்சி’ என்ற பாடத்தை நீக்கியுள்ளது.

சி.பி.எஸ்.இ., புதிய கல்வியாண்டுக்கான பாடத்திட்டங்களில் மாற்றம் செய்துள்ளது.இது பற்றி அந்த வட்டாரங்கள் கூறியதாவது:சி.பி.எஸ்.இ., நிர்வாகம், பிளஸ் ௧ மற்றும் பிளஸ் ௨ வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து, ‘அணிசேரா இயக்கம், பனிப்போர் காலம், ஆப்ரிக்கா – ஆசியாவில் இஸ்லாமிய பேரரசுகளின் எழுச்சி, முகலாய நீதிமன்றங்களின் வரலாறு, தொழிற்புரட்சி’ ஆகிய பாடங்களை நீக்கியுள்ளது.அதேபோல, 10-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து,

‘விவசாயத்தில் உலகமயமாக்கலின் தாக்கம்’ என்ற பாடம் நீக்கப்பட்டுள்ளது. மேலும் 10-ம் வகுப்பில் மதம், வகுப்புவாதம் மற்றும் அரசியல் -வகுப்புவாதம், மதச்சார்பற்ற அரசு ஆகிய பிரிவில் இருந்து, உருது கவிஞர் பைஸ் அகமது பைஸின் இரண்டு கவிதைகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த புதிய பாடத்திட்டம் 2022 – -2023 கல்வியாண்டில் நடைமுறைக்கு வருகிறது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.