திருப்பதி கோவிலில் 2 மணி நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழ் புத்தாண்டுக்கு முன்பு வரை 40 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர்.

சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதியில் 3 இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்தது.

பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் இலவச தரிசன டிக்கெட் வழங்கும் கவுண்டர்கள் மூடப்பட்டு அனைத்து பக்தர்களும் இலவச தரிசனத்தில் நேரடியாக அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த சில நாட்களாக ஏழுமலையான் கோவிலில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேரடியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால் விரைந்து சாமி தரிசனம் செய்ய முடிகிறது.

இன்று காலையில் ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்தில் 7 குடோன்கள் மட்டுமே நிரம்பி வழிந்தது. இதனால் 2 மணி நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பதியில் நேற்று 63,084 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 28,563 முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.12 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலானது.

திருப்பதி தேவஸ்தான பக்தி சேனலில் நேற்று மாலை 5.45 மணி முதல் 6.15 மணி வரை தெலுங்கு சினிமா பாடல்கள் ஒளிபரப்பப்பட்டன. இதனை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுதொடர்பாக தேவஸ்தான அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. உடனடியாக பக்தி சேனலில் ஒளிபரப்பப்பட்ட தெலுங்கு சினிமா பாடல்கள் நிறுத்தப்பட்டது.

மீண்டும் கோவில் விழா நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டது. இதுகுறித்து பக்தி சேனல் ஊழியர்களிடம் தேவஸ்தான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.