பெண் ஐஏஎஸ் அதிகாரியின் முதல் காதல் திருமணம் கசந்தது… அம்பேத்கர் புகைப்படம் முன் இரண்டாவது திருமணம்: மற்றொரு ஐஏஎஸ் அதிகாரியை கரம்பிடித்தார்

புதுடெல்லி: பெண் ஐஏஎஸ் அதிகாரியின் முதல் காதல் திருமணம் கசந்த நிலையில், அவர் மற்றொரு ஐஏஎஸ் அதிகாரியை அம்பேத்கர் புகைப்படம் முன்பாக மாலை மாற்றிக் கொண்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். கடந்த 2015ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் முதலிடம் பிடித்த டினா  டாபி, தற்போது ராஜஸ்தான் மாநில நிதித்துறையில் இணைச் செயலாளராக உள்ளார்.  இவருக்கும், ராஜஸ்தான் தொல்லியல் துறை மற்றும் அருங்காட்சியகத்தின்  இயக்குநர் பிரதீப் கவாண்டேவுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. ராஜஸ்தானில் நடந்த இந்த திருமண விழாவில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் தேசிய செயலாளர் வினோத் ஜாகர், மேற்கண்ட திருமணம் ெதாடர்பான புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், சட்ட மேதை அம்பேத்கரின் புகைப்படத்திற்கு முன், மணமக்களான டினா  டாபியும், பிரதீப் கவாண்டேவும் மலர் மாலைகளை மாற்றிக் கொண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களை பலரும் வாழ்த்தியுள்ளனர். முன்னதாக டினாபிக்கும், மற்றொரு ஐஏஎஸ் அதிகாரியான ஆதர் அமீர் கானுக்கும் காதல் திருமணம் நடந்தது. அமீர் கான், கடந்த 2015 சிவில் சர்வீஸ் தேர்வில் இரண்டாம் இடத்தைப் பெற்றவராவார். ஒரே பேட்ஜில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பிடித்த ஜோடிகள் திருமணம் செய்து கொண்டதை பலரும் பாராட்டினர். ஆனால் அவர்களின் காதல் வாழ்க்கை சில ஆண்டுகளிலேயே கசந்ததால், இந்த ஜோடி கடந்தாண்டு விவாகரத்து செய்தது. இந்த நிலையில் டினா  டாபியும், பிரதீப் கவாண்டேவும் கடந்தாண்டு ஒரு நிகழ்ச்சியில் சந்தித்துக் கொண்டனர். அப்போது இருவருக்குள்ளும் நட்பு ஏற்பட்டது. பிரதீப் கவாண்டே, டினா டாபியிடம் தனது காதலை முன்மொழிந்தார். அதன்பின் இருவரும் திருமணம் ெசய்து கொள்வதாக முடிவெடுத்தனர். கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இருதரப்பு பெற்றோர் சம்மதத்தின் பேரில் தற்போது திருமணம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.