திடீர் திடீரென பற்றி எரியும் மின்சார ஸ்கூட்டர்கள்.. 1441 ஸ்கூட்டர்களை திரும்ப பெறும் ஓலா.. !

இந்தியாவில் மின்சார வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களாகவே மின்சார வாகனங்கள் ஆங்காங்கே தீ பிடித்து எரிந்து வருகின்றன. இது மின்சார வாகன பிரியர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் புனே நகரில் ஓலா நிறுவனத்தின் இ – ஸ்கூட்டர் ஒன்று திடீரென்று தீ பிடித்து எரிந்து விபத்துக்குள்ளாகியது. இதற்கிடையில் நாடு முழுவதும் உள்ள 1441 மின்சார ஸ்கூட்டர்களை திரும்ப பெறுவதாக ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது.

வாகனங்களை திரும்ப பெறும் இந்த நடவடிக்கையானது, மின்சார வாகனங்களின் பயன்பாடனது அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், சில பிரச்சனைகளும் எழத் தொடங்கியுள்ளன.

முதலீடு செய்ய இதுதான் சரியான வாய்ப்பு.. முத்தான 3 பங்குகளை பரிந்துரை செய்த நிபுணர்கள்..!

தீப்பிடித்து எரிந்த சம்பவங்கள்

தீப்பிடித்து எரிந்த சம்பவங்கள்

குறிப்பாக ஓலா நிறுவனத்தின் பைக்குகள் மின்சார இருசக்கர வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரியும் சம்பவங்களுக்கு மத்தியில், குறைபாடுடைய அனைத்து மின்சார வாகனங்களையும் திரும்ப பெற்றுக் கொள்வதற்கான பணிகளை சம்பந்தபட்ட நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தரம் சார்ந்த வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்கவும் நிபுணர்கள் ஒரு குழுவை அமைக்குமாறும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தீவிர பரிசோதனை

தீவிர பரிசோதனை

இந்த நிலையில் தான் ஓலா 1441 மின்சார ஸ்கூட்டர்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. மேலும் இது குறித்தான அறிவிப்பில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1441 ஸ்கூட்டர்களை தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். பேட்டரி சிஸ்டம், தெர்மல் சிஸ்டம் போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓலா மட்டும் அல்ல
 

ஓலா மட்டும் அல்ல

ஏற்கனவே பேட்டரிகளுக்கு AIS 156 பரிசோதனை அரசு வழிகாட்டுதலைப் பின்பற்றி செய்துள்ளோம். தற்போது ஐரோப்பிய நாடுகளின் தர நிர்ணயமான ECE 136ன் படியும் தர ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் ஓலா மட்டும் அல்ல, ஒகினாவா ஆட்டோ டெக் நிறுவனம் 3000 வாகனங்களையும், ப்யூர் இவி 2000 வாகனங்களையும் திரும்ப பெற்றுள்ளது.

ஏன் தீப்பிடிப்பு என்ன காரணம்?

ஏன் தீப்பிடிப்பு என்ன காரணம்?

லித்தியம் அயன் பேட்டரிகள் தயாரிப்பில் குறைபாடு இருக்கலாம். குறிப்பாக அந்த பேட்டரிகளின் வெளிப்புறத்தில் சேதம், பேட்டரி செயல்திறன் குறைப்பு, சாப்ட்வேரில் ஏதேனும் பிரச்சனை என பல காரணிகள் காரணமாக இருக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: ola ஓலா

English summary

Amid EV fire incidents, Ola plans to recalls 1441 e-scooters

Amid EV fire incidents, Ola plans to recalls 1441 e-scooters/திடீர் திடீரென பற்றி எரியும் மின்சார ஸ்கூட்டர்கள்.. 1441 ஸ்கூட்டர்களை திரும்ப பெறும் ஓலா.. !

Story first published: Sunday, April 24, 2022, 16:00 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.