உதகையில் இன்று பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு: ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கிவைக்கிறார்

சென்னை: தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங் களின் துணைவேந்தர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (ஏப். 25) தொடங்குகிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த மாநாட்டைத் தொடங்கிவைக்கிறார்.

தமிழக ஆளுநர் மாளிகை சார்பில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கும் 2 நாள்மாநாடு உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்றும்,நாளையும் (திங்கள், செவ்வாய்க் கிழமை) நடைபெற உள்ளது.

புதிய உலக சூழலில் இந்தியாவின் பங்கு, 2047-ம் ஆண்டு இந்தியா முன்னணி ஆகிய கருத்துகளை மையப்படுத்தி நடத்தப்படும் இந்த மாநாட்டில், பல்கலைக்கழக மானியக் குழுத் (யுஜிசி) தலைவர் எம்.ஜெகதீஷ் குமார், ஜோஹோ கார்ப்பரேஷன் தலைமைச் செயல்அலுவலர் தர் வேம்பு சிறப்புரையாற்றுகின்றனர்.

இதில், தமிழகத்தில் உள்ள மாநில அரசு பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் கலந்து கொள்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.