சாமானியர்களுக்கு சர்பிரைஸ்.. 6வது நாளாக சரிவில் தங்கம் விலை.. எவ்வளவு குறைந்திருக்கு பாருங்க!

தங்கம்(gold) விலையானது சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் தொடர்ச்சியாக கடந்த சில அமர்வுகளாகவே சரிவினைக் கண்டு வரும் நிலையில், இன்றும் சரிவினைக் கண்டுள்ளது சர்பிரைஸ் தரும் விஷயமாக உள்ளது.

எனினும் இந்த சரிவானது இப்படியே தொடருமா? அல்லது -மீண்டும் ஏற்றம் காணுமா? இன்று என்ன செய்யலாம்? வாங்கலாமா? வேண்டாமா?

தற்போது சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன? டெக்னிக்கலாக எப்படி உள்ளது? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

சீனாவை ஓரம்கட்ட இந்தியா-வின் சூப்பர் திட்டம்..!

6வது நாளாக சரிந்த தங்கம் விலை

6வது நாளாக சரிந்த தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது கடந்த வார சரிவினைக் தொடர்ந்து இன்றும் சரிவினைக் கண்டுள்ளது. இது கடந்த வார குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. இதேபோல இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது பலத்த சரிவினைக் கண்டு வருகின்றது. இது மீடியம் டெர்மில் இன்னும் குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

ரூ.1600 சரிவு

ரூ.1600 சரிவு

தங்கம் விலையானது வலுவான அமெரிக்க டாலர் மற்றும் பத்திர சந்தைக்கு மத்தியில் சரிவினைக் கண்டு வருகின்றது. கடந்த ஆறு நாட்களில் தங்கம் விலையானது இதுவரையில் 10 கிராமுக்கு 1600 ரூபாய் சரிவில் காணப்படுகின்றது. சர்வதேச சந்தையிலும் தங்கம் விலையானது 2 வார சரிவில் காணப்படுகின்றது. இது குறைந்த விலையில் வாங்க சரியான வாய்ப்பாக பார்க்கப்பட்டாலும், இன்னும் குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

டாலர் மதிப்பு
 

டாலர் மதிப்பு

தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான அமெரிக்க டாலரின் மதிப்பானது 101.265 டாலர்களாக உச்சம் தொட்டுள்ளது. இது மற்ற கரன்சிதாரர்களுக்கு தங்கம் விலையினை மிக உயர்ந்ததாக மாற்றியுள்ளது. இது தங்கத்தில் முதலீடு குறைய காரணமாக அமைந்துள்ளது.

பத்திர சந்தையும் உச்சம்

பத்திர சந்தையும் உச்சம்

அமெரிக்காவின் பத்திர சந்தையும் தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறைய காரணமாக அமைந்துள்ளது. இது வரவிருக்கும் மத்திய வங்கி கூட்டத்தில் கொள்கைகளை கடுமையாக்க வழிவகுக்கலாம். இது டாலரின் மதிப்பு இன்னும் அதிகரிக்க வழிவகுக்கலாம். மொத்தத்தில் தங்கம் விலை குறைய வட்டி அதிகரிப்பும் ஒரு காரணமாக அமையலாம்.

பணவீக்கம் பற்றிய கவலை

பணவீக்கம் பற்றிய கவலை

மேற்கண்ட பல்வேறு காரணிகளும் தங்கத்திற்கு எதிராக இருந்தாலும், ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சனையானது சர்வதேச அளவில் பணவீக்கத்தினை தூண்டலாம். இது பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆன தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம். மொத்தத்தில் தங்கம் விலை தற்போதைக்கு குறைய பல காரணிகள் சாதகமாக இருந்தாலும், அதிகரித்து வரும் பணவீக்கமானது பொருளாதார சரிவுக்கும் வழிவகுக்கலாம். இது தங்கம் விலையினை ஏற்றம் காண வழிவகுக்கலாம்.

முக்கிய லெவல்கள்

முக்கிய லெவல்கள்

மேக்தா ஈக்விட்டீஸ் அறிக்கையின் படி, தங்கத்தின் முக்கிய லெவல்கள் 1917 – 1905 டாலர்களாகவும், இதே முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவலாக 1940 – 1948 டாலர்களாகவும் மதிப்பிட்டுள்ளனர். இதே இந்திய சந்தையில் முக்கிய சப்போர்ட் லெவலாக 51,920 – 51,770 ரூபாயாகவும், முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் 52,420 – 52,550 ரூபாயாகவும் கணித்துள்ளது.

சீனாவின் நெருக்கடி நிலை

சீனாவின் நெருக்கடி நிலை

சீனாவில் நிலவி வரும் நெருக்கடி நிலைக்கு மத்தியில் அங்கு பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இது சர்வதேச அளவில் மிகப்பெரிய தங்கம் நுகர்வோரான சீனாவில், நுகர்வு குறையுமே என்ற அச்சம் எழுந்தாலும், முதலீட்டு ரீதியாக இன்னும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் தங்கம் விலைக்கு சாதகமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரையில் சீனாவின் பல முக்கிய மாகாணங்கள் கொரோனாவின் பிடியில் இருந்து வருவதை தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. இது பொருளாதாரத்தினை பாதிக்ககூடும் என்றால், சீனாவின் ஜீரோ கொரோனா பாலிசி இன்னும் மோசமான நிலையை ஏற்படுத்தலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

எண்ணெய் விலை சரிவு

எண்ணெய் விலை சரிவு

சீனா கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ள நிலையில், அங்கு கடுமையான லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காராணமாக உலகின் மிகப்பெரிய நுகர்வோரான சீனாவின் எண்ணெய் தேவையானது சரியலாம் என்ற அச்சத்தின் மத்திலேயே எண்ணெய் விலையானது சரிவினைக் கண்டு வருகின்றது. ஆக இதுவும் தங்கம் விலை குறைய காரணமாக அமையலாம் என் எதிர்பார்க்கப்படுகிறது.

டெக்னிக்கல் எப்படியுள்ளது?

டெக்னிக்கல் எப்படியுள்ளது?

டெனிக்கலாக தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. சர்வதேச சந்தை இந்திய சந்தை என இரண்டிலுமே தங்கம் விலையானது சரிவினைக் காணும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கி வைக்கலாம்.

காமெக்ஸ் தங்கம்

காமெக்ஸ் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று குறைந்தே காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸுக்கு 17.40 டாலர்கள் குறைந்து, 1916.70 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை காட்டிலும், இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. எனினும் நீண்டகால நோக்கில் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

காமெக்ஸ் வெள்ளி

காமெக்ஸ் வெள்ளி

தங்கம் விலையேனும் 1% தான் குறைந்துள்ளது. ஆனால் வெள்ளியின் விலை கிட்டதட்ட 2% சரிவினைக் கண்டுள்ளது. இது தற்போது அவுன்ஸூக்கு 1.94% குறைந்து, 23.782 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலை குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

எம்சிஎக்ஸ் தங்கம்

எம்சிஎக்ஸ் தங்கம்

இந்திய சந்தையினை பொறுத்தவரையில் தங்கம் விலையானது, சர்வதேச சந்தையின் எதிரொலியாக பலத்த சரிவிலேயே காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 373 ரூபாய் குறைந்து 51,888 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று தொடக்கத்தில் கேப் டவுன் ஆகி கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக தங்கம் விலையானது சரியலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

எம்சிஎக்ஸ் வெள்ளி

எம்சிஎக்ஸ் வெள்ளி

வெள்ளியின் விலையும் சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் 1.66% சரிவினைக் கண்டே காணப்படுகின்றது. இது தற்போது கிலோவுக்கு 1106 ரூபாய் குறைந்து, 65,450 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கேப் டவுன் ஆகி கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலையானது குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலையும் சரிவில் காணப்படுகின்றது. தற்போது சென்னையில் கிராமுக்கு 16 ரூபாய் குறைந்து, 4928 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 128 ரூபாய் குறைந்து, 39,424 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் கிராமுக்கு 18 ரூபாய் குறைந்து, 5376 ரூபாயாகவும், இதுவே 8 கிராமுக்கு 144 ரூபாய் குறைந்து, 43,008 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 53,760 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை

வெள்ளி விலை

இதே சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது சற்று குறைந்தே காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 80 பைசா குறைந்து, 70.80 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 800 ரூபாய் குறைந்து, 708 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 800 ரூபாய் குறைந்து,70,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

சர்வதேச தங்கம் மற்றும் வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக நீண்டகால நோக்கில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். இது பணவீக்கம்,டாலர் மதிப்பு, பத்திர சந்தை, ரஷ்யா – உக்ரைன் பேச்சு வார்த்தை உள்ளிட்ட பல காரணிகள் விலையில் முக்கிய மாற்றத்தினை ஏற்படுத்தலாம். இதே ஆபரணத் தங்கத்தினை பொறுத்தவரையில் தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

gold price on April 25th, 2022: gold prices today fall for 6th day in a row

gold price on April 25th, 2022: gold prices today fall for 6th day in a row /சாமானியர்களுக்கு சர்பிரைஸ்.. 6வது நாளாக சரிவில் தங்கம் விலை.. எவ்வளவு குறைந்திருக்கு பாருங்க!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.