சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாடு முழுவதும் நாளை தொடங்குகிறது…

டெல்லி: நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு  மாணவர்களுக்ன 2வது பருவ பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. இந்த தேர்வு  ஜூன் 14 வரை நடைபெற உள்ளது.

நாடு முழுவதும் நாளை 10,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள்  இரண்டு கட்டமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முதல்கட்ட பருவத்தேர்வு தொடங்கி உள்ள நிலையில், இரண்டாவது பருவத் தேர்வு ஏப்ரல் 26ந்தேதி முதல் ஜூன் 14 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, போர்டு தேர்வு இரண்டு பருவமாக நடத்தப்படுகிறது. சிபிஎஸ்இ வாரியத்தின் முதலாம் பருவத் தேர்வு கடந்த நவம்பர்-டிசம்பர் 2021 இல் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 2வது பருவ பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது.  இரண்டு பருவ தேர்வுகளிலும்  மாணாக்கர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும், மாணவர்களின் செயல்பாடு உள் மதிப்பீடு அடிப்படையிலும் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும் என்று தெரிவி க்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே 2ஆம் பருவத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்கள் ஏற்கனவே cbse.nic.in மற்றும் cbse.gov.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

சிபிஎஸ்இ 2 ஆம் பருவ வாரியத் தேர்வு குறித்து சிபிஎஸ்இ புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, 

விடைத்தாள்கள் மற்றும் கூடுதல் தாள்களில் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் ரோல் எண் மற்றும் பிற விவரங்களை எழுத வேண்டும்.  கூடுதல் தாள்களை எண் வாரியாக வரிசைப்படுத்தி, சமர்ப்பிப்பதற்கு முன் அவற்றை விடைத்தாளில் சரியாகக் கட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

மாணாக்கர்கள்  கடைசி நிமிட பதற்றத்தை தவிர்க்க சரியான நேரத்தில் தேர்வு நடைபெறும் இடத்திற்குச் செல்லுங்கள் என்று தெரிவித்துள்ளதுடன்,  கோவிட்-19 வழிகாட்டுதல்கள் மற்றும் தேர்வு மைய வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும், முக்கவசம் அணிவதுடன், கை சுத்திகரிப்பான் கொண்டு கைகளை சுத்தப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், தேர்வு நடைபெறும் இடத்திற்குள் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளதுடன்,  அனைத்து தேர்வு நாட்களிலும் உங்கள் ஹால் டிக்கெட்டின் அச்சிடப்பட்ட நகலை எடுத்துச் செல்லுங்கள்.

பருவம் 2 பாடத்திட்டம், மாதிரி தாள்களை பதிவிறக்கம் செய்ய, மாணவர்கள் cbseacademic.nic.in ஐப் பார்வையிடலாம் என்றும் கூறியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.