தூங்குவதற்கு அரைமணி நேரம் முன் சூடான பால் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?



படுக்கையில் இந்த பக்கம் உருண்டு புரண்டாலும் தூக்கம் வர மாட்டேங்குது! இந்த வார்த்தையை தற்போதைய காலக்கட்டத்தில் பலரும் சொல்லி கேட்டிருப்போம்.
ஏனெனில் அந்த அளவுக்கு தூக்கமின்மை பிரச்சனையால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.
போதுமான அளவு தூங்குவது உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

தூக்கமின்மை பிரச்சனையை சரி செய்து படுத்த உடனே தூங்க உதவும் சில உணவுகள்

சூடான பால்

தூங்க செல்வதற்கு ஒரு 45 நிமிடங்கள் முன் மிதமான சூட்டில் பாலை குடிப்பது நன்றாக தூங்க உதவுகிறது. பாலில் காணப்படும் மெலடோனின் (melatonin) மற்றும் செரோடோனின் (serotonin) ஒருவரை நிம்மதியாக தூங்க செய்கிறது. 

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் இயற்கையான கார்போஹைட்ரேட் உள்ளது. இது இயற்கை முறையில் தூக்கத்தை வர வழைக்க உதவுகிறது. இதில் இருக்கும் என்சைம்கள் புரோபயாடிக்குகளை வளர்க்க உதவுகின்றன. அதே போல வாழைப்பழங்கள் ப்ரீபயாடிக்குகளின் நல்ல மூலமாகும். ப்ரீபயாடிக்குகள் நம் உடலில் சேர்வது நிம்மதியான உறக்கம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்க உதவும்.

சாக்லேட்

சாக்லேட் ரிலாக்ஸ் ஆக உதவும் endorphin என்னும் ரசாயனம் உருவாக உதவுகிறது. அத்துடன் கொக்கோவிலும் தூக்கத்திற்கு உதவும் tryptophan உள்ளது.

பூசணி விதைகள்

மக்னீசியமும் துத்தநாகமும் நிறைந்த பூசணி விதைகள் தூக்கத்தை மேம்படுத்த உதவுவதாக ஆய்வுகளிலிருந்து தெரியவந்துள்ளது. அவற்றிலுள்ள உயர் புரதம் இரவு முழுவதும் தூக்கத்திலிருந்து எழும்பாமல் தூங்க உதவுகிறது.

செர்ரி

பினியல் சுரப்பி மூலம் இரவில் வெளியிடப்படும் மெலடோனின் என்ற ஹார்மோன் செர்ரிக்களில் இருக்கிறது. இது தூக்க கழகத்தை ஏற்படுத்தி ஒரு கட்டத்தில் நன்றாக தூங்க உதவி செய்கிறது. 

பாதாம்

கூர்மையான நினைவாற்றல் பெற பலர் காலையில் ஊறவைத்த பாதாமை உட்கொள்கிறார்கள். ஆனால் நீங்கள் படுக்கைக்குச் செல்வதற்கு சற்று முன்பு பாதாமை சாப்பிடுவது நன்றாக தூங்க உதவும் என்று உங்களுக்குத் தெரியுமா? பாதாம் சூப்பர் ஆரோக்கியமானது மற்றும் அதிக அளவு மெலடோனின் கொண்டிருக்கிறது. இது உங்கள் தூக்க சுழற்சியை சீராக்க உதவுகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.