பிரதமர் இல்லத்தின் முன் தொழுகை நடத்த அனுமதி வேண்டும்; மந்திரி அமித்ஷாவுக்கு கடிதம் அனுப்பிய தேசியவாத காங்கிரஸ் தலைவர்

மும்பை,
மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் மாதோஸ்ரீ இல்லம் முன் அனுமன் பஜனை பாட இருக்கிறோம் என அமராவதி எம்.பி. நவ்னீத் ரானா மற்றும் எம்.எல்.ஏ.வான அவரது கணவர் ரவி ரானா ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு  கூறினர்.  இந்த விவகாரம் சர்ச்சையானது. 

இந்த நிலையில், இந்த சர்ச்சை விவகாரத்துக்கு பதிலடி தரும் விதமாக, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பஹ்மிதா ஹாசன் கான் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 
அதில் பிரதமர் மோடியின் இல்லத்தின் முன் அனைத்து மதத்தினரும் பிரார்த்தனை செய்ய அனுமதித்திட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது, “ரவி ராணாவும் நவ்நீத் ராணாவும் உத்தவ் தாக்கரேவின் இல்லத்திற்கு வெளியே அனுமன் பாடலைப் படிப்பதன் பலனை அனுபவிக்க முடியும் என்றால், டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்திற்கு சென்று தொழுகை நடத்த எங்களை அனுமதிக்க வேண்டும்.
நாட்டில் பணவீக்கமும் வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்து வருவதால், நாட்டின் பிரதமரை தட்டி எழுப்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.”
இவ்வாறு பொருள்பட அவர் எழுதியுள்ளார்.
டெல்லி லோக் கல்யாண் மார்க் பகுதியில் பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லம் அமைந்துள்ளது.
அங்கு அனுமான் பாடலையும் பாடுவேன், தொழுகையையும் நடத்துவேன், துர்கா சாலிசா, நமோகர் மந்திரம் படிக்க விரும்புகிறேன். 
பணவீக்கம், வேலையின்மை, பட்டினி ஆகியவற்றைக் குறைக்கவும்,  நாட்டின் நலனுக்காகவும் ‘இந்துத்துவா, சமண மதம்’ மேலோங்குகிறது என்றால், நானும் அதை செய்ய விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.