5 முறை சாம்பியனான மும்பைக்கு வந்த சோதனை…விடாது துரத்தும் தொடர் தோல்விகள் – தகரும் பிளே-ஆப் கனவு?

மும்பை,
ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு சீசனில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. 
2008 ஆம் ஆண்டு தொடங்கி 14 ஆண்டுகள் நடைபெற்ற தொடர்களில் மும்பை அணி ஐந்து முறை சாம்பியன் ஆகியுள்ளது. ஆனால், இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் மும்பை அணி விளையாடிய எட்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

இந்த சீசனின் மும்பை விளையாடிய முதல் போட்டியில் டெல்லியிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இரண்டாவது போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வீழ்த்தியது. மூன்றாவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடமும். நான்காவது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவிடமும் தோல்வியடைந்தது. 
ஐந்தாவது போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியும், ஆறாவது போட்டியில் லக்னோ அணியும் மும்பையை வீழ்த்தின. ஏழாவது போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையிடம் தோற்ற நிலையில், நேற்று நடைபெற்ற லக்னோவிற்கு எதிரான எட்டாவது போட்டியிலும் மும்பை அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.
விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளதால், புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து கடைசி இடத்தில் உள்ளது. தொடர் தோல்விகளால், மும்பை அணி வீரர்கள் சோர்வடைந்துள்ள நிலையில், மும்பை ரசிகர்களும் வருத்தமடைந்துள்ளனர். எஞ்சிய அனைத்து போட்டிகளிலும் மும்பை அணி வென்றாலும் கூட, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு என்பது சாத்தியமற்ற நிலையில் உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.