ஓடிடியில் வெளியாகும் சாணி காகிதம்

ஓடிடியில் வெளியாகும் சாணி காகிதம்

ஓடிடியில் வெளியாகும் சாணி காகிதம்

4/26/2022 1:45:00 PM

ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள படம்  சாணி காகிதம், ராக்கி படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். கீர்த்தி சுரேஷ், மற்றும் செல்வராகவன் ஆகியோர் முதன்மை  கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஒரு கசப்பான கடந்த காலத்தை தன்னோடு பகிர்ந்து கொண்ட சங்கையாவோடு (செல்வராகவன்)  இணைந்து கீர்த்தி சுரேஷ் எதிரிகளை பழிவாங்கும் கதை.  மே 6ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகிறது. தெலுங்கில் சின்னி என்ற பெயரிலும் மலையாளத்தில் சாணிக்காயிதம் என்றபெயரிலும்  வெளியாகிறது.

படம் குறித்து  இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கூறியதாவது: சாணிக்காயிதம் மனதை உலுக்கும் ஒரு அழுத்தமான படைப்பு; மனதைக்கொள்ளை கொள்ளும்  வகையிலான கதை சொல்லும் பாங்கு மற்றும் அற்புதமான நடிப்பு ஆகியவற்றை கொண்டுள்ள இந்தத் திரைப்படம் அதிரடி காட்சிகளை விரும்பும் ரசிகர்களை இறுதிவரை கட்டிப்போடும்.
வழக்கமான கதைகளை வழக்கத்திற்கு மாறாக ரத்தமும் சதையுமாக மயிர்க்கூச்செறியும் வகையில்  மாறுபட்ட வடிவங்களில் சொல்வதில் நான் மிகவும் உற்சாகம் அடைகிறேன். பழிவாங்கும்  குறிக்கோளோடு  பயணப்படும் ஒரு பெண்ணின் கதை இது.  என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.