‘Face shield’ அணிந்து பந்துவீசிய ரிஷி தவன் – இதுக்குப் பின்னாடி இப்படியொரு கதையா?!

நேற்று நடந்த சென்னைக்கு எதிரான போட்டியில் அசத்தலாக விளையாடிய பஞ்சாப் அணி, வெற்றிபெற்றது. வெற்றிபெற்றது எனச் சொல்வதைவிட சென்னை அணியின் பிளே ஆஃப் கனவைக் கிட்டத்தட்ட சிதறடித்துவிட்டது என்றே கூறலாம்.

ஃபேஸ் ஷீல்டுடன் வந்த ரிஷி தவன்

பஞ்சாப் அணியில் சிறப்பாக பேட்டிங் செய்த ஷிகர் தவன் அதிரடியாக விளையாடி 59 பந்துகளில் 88 ரன்கள் குவித்தார். இந்த தவன் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தாரோ இல்லையோ மற்றொரு தவனான ரிஷி தவன் பலரையும் கவனிக்கவைத்தார். அதற்குக் காரணம் அவர் அணிந்திருந்த ஃபேஸ் ஷீல்டு. பேட்ஸ்மேன்கள் மற்றும் விக்கெட் கீப்பர்கள் பாதுகாப்பு கருதி ஹெல்மெட் அணிந்து விளையாடுவது கிரிக்கெட்டில் வழக்கமான ஒன்று.

சில நேரங்களில் கள நடுவர்கள்கூட ஹெல்மெட் அணிந்து விளையாடியுள்ளார்கள். தற்போதைய ஐபிஎல் தொடர் உள்ளிட்டவற்றில் கள நடுவர்கள் கைகளை மறைக்கும் விதமாக ஷீல்டு அணிந்திருப்பதைக்கூட பலர் பார்த்திருக்கலாம். ஆனால் பந்து வீச்சாளர் ஃபேஸ் ஷீல்டு அணிந்து பந்து வீசுவது மிக அரிது. இதுதான் நேற்றைய போட்டியில் ரிஷி தவனை பலரும் உன்னித்துப் பார்க்க காரணமாக அமைந்தது.

மேலும் படிக்க | சென்னை சூப்பர் கிங்ஸூக்கு இருக்கும் கடைசி ஆயுதம்

 

                               

ஃபேஸ் ஷீல்டுக்கான காரணம்

ரிஷி தவன் ஃபேஸ் ஷீல்டு அணிந்துவந்ததைப் பார்த்த நெட்டிசன்ஸ் சிலர் விபரம் தெரியாமல் கிண்டல் செய்துவந்தனர். ஆனால் ரிஷி தவன் ஃபேஸ் ஷீல்டு அணிந்துவந்ததன் பின்னால் ஒரு சோகக் கதையும் உள்ளது. பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள ரிஷி தவன் இந்த ஐபிஎல்லில் முதன்முதலாக களம் இறங்கியதே நேற்றைய போட்டியில்தான். முதல் 4 போட்டிகளுக்குப் பின்தான் அவர் அணியுடனேயே இணைந்துள்ளார். இந்தத் தாமதத்துக்கும் நேற்று அவர் ஃபேஸ் ஷீல்டு அணிந்துவந்ததற்கும் ஒரு தொடர்பு உண்டு.

அதாவது ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ரஞ்சி ட்ராபியில் அவர் விளையாடியபோது காயம் ஏற்பட்டதாம். இதையடுத்து தனது மூக்குக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார் ரிஷி தவன். இதனால்தான் ஐபிஎல்லுக்கு உடல் தகுதியுடன் திரும்ப காலதாமதமானதாம்.  மூக்குப் பகுதியில் காயம் ஏற்பட்டுவிடக்கூடாது என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத்தான் அவர் ஃபேஸ் ஷீல்டுடன் களமிறங்கியதாகக் கூறப்படுகிறது.

                                                            Rishi Dhawan

முக்கிய ஓவரை வீசிய ரிஷி தவன்

சென்னைக்கு எதிரான போட்டியில் பந்து வீசிய ரிஷி, நல்ல ஃபார்மில் உள்ள ஷிவம் தூபேவின் விக்கெட்டைத் தூக்கினார். அதேபோல பரபரப்பாகச் சென்ற போட்டியின் கடைசி ஓவரையும் அவரே வீசினார். 6 பந்துகளில் 27 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கட்டுக்கோப்பாக பந்துவீசிய அவர், தோனியின் விக்கெட்டையும் கைப்பற்றினார். 2016ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீண்டும் ஐபிஎல்லுக்குத் திரும்பியுள்ள ரிஷி தவனுக்கு முதல் போட்டியே சிறப்பாக அமைந்துள்ள நிலையில் பலரும் அவருக்குப் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.

மேலும் படிக்க | ‘IPL’ ஃபேனா நீங்க? அப்போ கண்டிப்பா இது உங்களுக்குத்தான்! #Facts-Of-IPL

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.