ஜீவனாம்சம் தரவேண்டும்.. பிக்பாஸ் அபிநய் மனைவியின் போஸ்ட்.. இப்படி ஒரு பதிவு தேவையா?

சென்னை : ஜீவனாம்சம் குறித்து அபிநய்யின் மனைவி பதிவிட்ட போஸ்ட் தற்போது இணையத்தில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் அபிநய் வட்டி.

இவர் பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரி ஆகியோரின் மகள் வழி பேரன் ஆவார்.

பிக் பாஸ் சீசன் 5

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்ற அபிநய். முதல் வாரத்திலிருந்தே எலிமினேஷனில் இருந்து வந்தார். பல முறை நாமினேஷனில் சிக்கினாலும் மக்களின் ஆதரவு இருந்ததால் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் 77 நாட்கள் தாக்குபிடித்து இருந்தார்

காதல் விவகாரம்

காதல் விவகாரம்

ஆரம்பத்திலிருந்தே பாவனியின் பின்னால் சுற்றி பெயரை கெடுத்துக்கொண்டார் அபிநய். இவருக்கும் பாவனிக்கும் இடையே காதல் இருப்பதாக பேசப்பட்டது. இவர்கள் இருவரின் உறவு குறித்த பேச்சுகள் பிக்பாஸ் வீட்டுக்குள் அதிகரித்தன. குறிப்பாக ட்ருத் ஆர் டேர் டாஸ்க்கில் ராஜூ கேட்ட கேள்வியால் பிக் பாஸ் வீடே இரண்டானது.

பெயரை நீக்கினார்

பெயரை நீக்கினார்

அபிநய் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டதை அடுத்து, அபிநய் மனைவி அபர்ணா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெயருக்கு பின்னால் இருந்த அபிநய் பெயரை நீக்கிவிட்டார். இதனால் இருவரும் சமந்தா பாணியில் விவாகரத்து செய்ய உள்ளதாக பேச்சுக்கள் உலா வந்தன.

சந்தேகம் வலுத்தது

சந்தேகம் வலுத்தது

இதையடுத்து டிஸ்னி பிளஸ் ஹாஸ்டாரில், ஒளிபரப்பான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால், அந்த நிகழ்ச்சியிலும் அபிநய் வெற்றி பெறவில்லை. நிகழ்ச்சி முடிந்த பிறகும் அபினை – அபர்ணா இருவரும் ஜோடியாக ஒரு போட்டோ கூட வெளியிடவில்லை. இதனால் சந்தேகம் வலுத்தது. இதையடுத்து, அபிநய் பிறந்தநாள் பார்ட்டியில் அபர்ணா கலந்துகொண்டதால் சர்ச்சை சற்று குறைந்தது.

ஜீவனாம்சம்

ஜீவனாம்சம்

இந்நிலையில், அபினையின் மனைவி அபர்ணா தனது இன்ஸ்டாகிராமில் விவாகரத்து பற்றி ஒரு பதிவினை போட்டிருக்கிறார். அதில், விவாகரத்து ஆகும் போது பெண்களுக்கும் ஜீவனாம்சம் தரும் நிலை வர வேண்டும். அது தான் உண்மையான gender equality என குறிப்பிட்டு இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஏன் இந்த பதிவு என்றும், ஏற்கனவே வதந்தி இருக்கும் போது இப்படி ஒரு பதிவு தேவையா? என்றும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

English summary
Bigg Boss Abhinay wife Aparna instagram post

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.