ராஜேந்திர சோழன் – திராவிடர்கள்…! புதிய வெர்சனை வெளியிடும் "தி ஏஜ் ஆஃப் எம்பயர் II"

தி ஏஜ் ஆஃப் எம்பயர் என்பது மிகவும் பிரபலமான ரியல் டைம் ஸ்டிராட்டஜி வீடியோ கேமாகும். இந்த வீடியோ கேம் பல்வேறு தீம்களில் தனது வெர்சன்களை வெளியிடுவது வழக்கம். 

1997 ஆம் ஆண்டு ஆக்டோபர் 15ல் முதன் முதலாக இந்த கேமிங் கம்பேனி தனது முதல் வெர்சனை வெளியிட்டது. 

இது வரை 22 கேம் வெர்சன்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடதக்கது. இந்த கேம் வெர்சன்களை எக்ஸ்பாக்ஸ் கேம் ஸ்டூடியோ, மைக்ரோசாஃப்ட் கார்போரேசன் போன்ற நிறுவனங்கள் வெளியிடுகின்றன.

இந்த கேமின் சிறப்பம்சமே பல்வேறு நாடுகளின் வரலாற்று கதைகள் மற்றும் புராணகால கதைகளை பினைத்து கதா பாத்திரங்களை உருவாக்கி அந்த கதாபாத்திரங்களோடு நம்மை விளையாட வைப்பதே ஆகும். மேலும், நாடுகள், பிராந்தியங்களை கைப்பற்றும் யுக்திகளை செயல்படுத்தும் விதத்தில் உருவாக்கப்பட்டதே இந்த ஏஜ் ஆப் எம்பயர் கேம் சீரீஸ். 

மேலும் படிக்க | Thanjavur Temple Chariot: உயிரிழந்தவருக்கு பேரவையில் இரங்கல்; 2 நிமிட மௌன அஞ்சலி

நிகழ்நேர உத்தி விளையாட்டு ஏஜ் ஆஃப் எம்பயர்ஸ் ll: Definitive Edition ஆனது Forgotten Empires-ன் கீழ் இரண்டு பேக்குகளை வெளியிட்டுள்ளது – 2019 இல் தரையிறங்கிய இந்த மேம்படுத்தப்பட்ட கேமின் டெவலப்பர்.

லார்ட்ஸ் ஆஃப் தி வெஸ்ட் மற்றும் டான் ஆஃப் தி டியூக்ஸைத் தொடர்ந்து, ஸ்டுடியோ தற்போது டைனாஸ்டீஸ் ஆஃப் இந்தியா என்ற புத்தம் புதிய வெர்சனை அறிவித்தது. 

இதில் கேம்பெயின்களில் விரிவாக்கம், மல்டி பிளேயர் விளையாடும் சிவிலைஷேஷன் போன்ற பல்வேறு அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த கேமில் தமிழர் வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் ராஜேந்திர சோழனின் கதாபாத்திரத்தை மையப்படுத்திய ராஜேந்திரா கேம்பெயின் வெளியாகியுள்ளது. இதில் ராஜேந்திர சோழன் தென் இந்தியாவில் தனது ராஜியத்தை விரிவு படுத்தும் கதையை மையப்படுத்தியுள்ளனர். மேலும் இதில் விளையாடுபவர்கள் திராவிட மக்களாக விளையாடலாம்.

அதேபோல் புதிய பாபர் கேம்பெயினில் விளையாடுபவர்கள் டாடார்ஸ், ஹிஸ்துஸ்தானியர்கள் கதாப்பாதிரங்களை பூண்டு விளையாடலாம்.  இந்த கதையம்சம் “தி டைகர்” என்ற ஜாகிர் உத்தீன் முகமது என்ற கதாபாத்திரத்தை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விரிவாக்கம் மல்டிபிளேயர்களுக்கு மூன்று புதிய நாகரீகங்களை வழங்குகிறது. பெங்காளிகள் (யானை மற்றும் கடற்படை போனஸ்), திராவிடர்கள் (காலாட்படை மற்றும் கடற்படை போனஸ்) மற்றும் குஜாராக்கள் (குதிரைப்படை மற்றும் ஒட்டக போனஸ்).

தேவபால கேம்பெயின் பெங்காளி மக்கள் விளையாடக்கூடிய பிரிவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவு பேரரசர் தேவபாலனின் கொள்கைகள் மற்றும் ஒழுக்கங்களைப் பற்றிய கதையை மையப்படுத்தியுள்ளது. 

மேலும், இந்த கேம்பெயின்களில் வரும் மிஷன்கள் அனைத்திலும் குரல் கொடுக்கப்பட்டவையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

23 புதிய சாதனைகளும் இந்த விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை ஸ்டீம் மற்றும் எக்ஸ்பாக்ஸ் பிளேயர்களுக்கு தற்போது விளையாட கிடைக்கிறது.

தி ஏஜ் ஆஃப் எம்பயர்ஸ் II: டெஃபனிடிவ் எடிஸ்ரீன் – டைனாஸ்டீஸ் ஆஃப் இந்தியா எக்ஸ்டன்ஷன் Steam மற்றும் Microsoft Store இல் ஏப்ரல் 28 அன்று வெளியிடப்படுகிறது. விளையாட விரும்புவோர் இதன் விலையான $9.99 (ரூ. 750) ஐ செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு தென் இந்தியாவை பிரதிபளிக்கும் கதாபாத்திரங்களுக்கு திராவிடர்கள் என்று பெயரிடப்பட்டிருப்பது இணையத்தில் பலர் சாதகமாகவும், சிலர் பாதகமாகவும் கருதி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

சிலர் ராஜேந்திர சோழன் திராவிடர் இல்லை என்றும் தமிழர் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டி சமூக வலைதளங்களில் தீவிர வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | தஞ்சாவூர் துயர சம்பவத்தால் பேரதிர்ச்சியும் பெருந்துயருமடைந்தேன்: சீமான்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.