அழகான 9 மனைவிகள்: டைம் டேபிள் போட்டு காதலிக்கும் காதல் கணவன் ஆனாலும் நேரம் பத்தலையே

மனைவியை காதலிக்க நேரம் ஒதுக்கி வாழும் மனிதரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவுதான். ஆனால், 9 மனைவிகள், அதுவும் அழகான மனைவிகள் இருந்தால், பாவம் கணவர் என்ன செய்வார்?
ஆனால் வருத்தம் என்னவென்றால், காதலுக்காக டைம் டேபிள் போட்டாலும் அதை சரிவர கடைபிடிப்பது கஷ்டமாக இருக்கிறதாம்!

 பிரேசிலில் வசிக்கும் ஆர்தர் ஓ உர்சோ 9 பெண்களை திருமணம் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.  இப்போது அவர் அனைவருக்கும் உரிய நேரத்தை வழங்காததால் கவலைப்படுகிறார்.

மனைவிகள் அனைவரும் அவருடன் நேரம் செலவிட விரும்பியதால், அனைவருக்கும் சமமான நேரத்தை வழங்க ஆர்தர் ஒரு ‘காதல் அட்டவணை’யை உருவாக்கினார். எல்லா மனைவிகளையும் நேசிப்பதற்கு உரிய நேரம் ஒதுக்குவதை உறுதி செய்வதற்காக இப்படி பல திட்டங்களை தீட்டினாலும், பாவம் அவரால் அனைவரையும் திருப்திப்படுத்த முடியவில்லையாம்.

மேலும் படிக்க | காதல் மனைவியை அடித்தே கொலை செய்த கணவன்

எந்த மனைவிக்கும் வருத்தம் வரக்கூடாது என்பதற்காக காதலுக்கான டைம் டேபிளை உருவாக்க ஆர்தர் முடிவு செய்தார். ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகத் தான் இருந்தது. ஆனால் நாளடைவில் அதுபலனளிக்கவில்லை என்று சொல்கிறார் இந்த டைம் டேபிள் கணவர். 

இந்த நேர அட்டவணையைப் பின்பற்றுவதில் பல சிக்கல்கள் இருந்தன. சில நேரங்களில், அட்டவணைப்படி மனைவிகளை காதலிப்பது கஷ்டமாக இருந்தது. கட்டாயத்தின் பேரில் காதல் வருமா என்ன? எல்லோருக்கும் நேரம் கொடுத்தாலும் சில மனைவிகள் ஏதோ ஒரு விஷயத்துக்காக கோபித்துக் கொள்வார்கள்.

9 மனைவிகளில் ஒருவர் விவாகரத்து கோரினார்
9 பெண்களை மணந்த ஆர்தர் சுதந்திரமான காதலை நம்பனார்.  ஒரே ஒரு திருமணம் என்பது சரியில்லை என்று நினைத்ததால் பல திருமணங்களை செய்துக் கொண்டாராம்.

ஆர்தரின் மீது அதிருப்தியடைந்த மனைவி ஒருவர் விவாகரத்து பெறுவதற்கும் முடிவு செய்துள்ளார். கணவர் தன்னிடம் மட்டுமே இருக்க வேண்டும், வேறு மனைவிகளிடம் செல்லக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கிறாராம்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Arthur O Urso (@arthurourso)

ஆனால் கட்டுப்பாடுகள் 9 பேரை திருமணம் செய்துக் கொண்டவரை கட்டுப்படுத்துமா என்ன? ஒரு மனைவிக்காக மீதமுள்ள எட்டு மனைவிகளை விட்டுவிட முடியுமா என்ன?

சரி மனைவிகளின் எண்ணிக்கையில் ஒன்று குறைந்தால் பரவாயில்லை என்று ஆர்தர் மனதை தேற்றிக் கொள்கிறாராம். ஆனால், இறுதியில் டைம் டேபிள் உள்ள சிஸ்டத்தை பின்பற்ற முடியவில்லை. டைம் டேபிளுடன் கூடிய காதல் ஒத்து வராது என்று ஆர்தர் முடிவுக்கு வந்துவிட்டார். 

இப்போது ஆர்தர் யாருக்காக எவ்வளவு நேரம் ஒதுக்கலாம் என்பதை மனைவிகள் முடிவு செய்வதில்லையாம். இருப்பினும், ஆர்தருக்கு சில விஷயங்களில் கவலை ஏற்படுகிறது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Arthur O Urso (@arthurourso)

அது என்ன தெரியுமா? யாருக்கு எந்த பரிசு கொடுப்பது என்பது அவருக்கு பல சமயங்களில் பிரச்சனையாக இருக்கிறதாம், ஏனென்றால் ஒரு மனைவிக்கு விலையுயர்ந்த பரிசு கொடுத்தால் மற்ற மனைவிகள் கோபப்படுகிறார்கள் என்று ஆர்தர் வருத்தப்படுவதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இதை கேட்கும் கணவர்கள், ”அட போப்பா… ஒரு மனைவிக்கு கிஃப்ட் கொடுத்தே திருபதிபடுத்த முடியவில்லை. நீ எட்டு பேரை எப்படி சமாளிக்கிறயோ?” என்று பெருமூச்சு விடுகிறார்களாம்.

மேலும் படிக்க | KGF நாயகன் யஷ் உண்ணும் உணவுகள் இவைதான்: ஜாலியாக அழகாகும் உணவுகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.