இந்திய பார்மா நிறுவனத்தில் முதலீடு செய்யும் அபுதாபி அரசு நிறுவனம்.. வாவ்..!

ஐக்கிய அரபு நாடுகள் உள்நாட்டு மருந்து மற்றும் மருந்து பொருட்களின் உற்பத்தி பிரிவை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டு வருகிறது. மேலும் வளைகுடா நாடுகளைப் பார்மா பொருட்களுக்கான ஏற்றுமதி ஹப் ஆக மாற்றவும் திட்டமிட்டு உள்ளது.

இப்பிரிவில் வர்த்தகக்தை குறைந்த காலகட்டத்தில் பெரிய அளவில் உருவாக்க ஐக்கிய அரபு நாடுகளுக்கு முக்கியக் கூட்டணி நிறுவனமாக விளங்குவது இந்தியா பார்மா நிறுவனங்கள். இந்நிலையில் அபுதாபி அரசு முதலீட்டு நிறுவனம் இந்திய பார்மா நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.

ரெயின்போ சில்ட்ரன்ஸ் மெடிகேர் IPO: முதலீடு செய்யலாமா..? வேண்டாமா..?

அபுதாபி முதலீட்டு ஆணையம்

அபுதாபி முதலீட்டு ஆணையம்

அபுதாபி அரசுக்குச் சொந்தமான முதலீடு நிறுவனமான அபுதாபி முதலீட்டு ஆணையம் (ADIA), இந்தியாவின் இன்டாஸ் பார்மா நிறுவனத்தில் சுமார் 3 சதவீத பங்குகளை 250-270 மில்லியன் டாலர் அதாவது கிட்டத்தட்ட 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்து கைப்பற்றியுள்ளது. இன்டாஸ் பார்மா நிறுவனம் இந்த முதலீட்டுச் சுற்றில் 8.5 பில்லியன் டாலராக (65,000 கோடி ரூபாய்) மதிப்பீடு செய்ய உள்ளது.

இன்டாஸ் பார்மா

இன்டாஸ் பார்மா

இன்டாஸ் பார்மா நிறுவனத்தின் தற்போதைய முதலீட்டாளரான டெமாசெக் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திடம் இருக்கும் 10 சதவீத பங்குகளில் 3 சதவீத பங்குகளை வாங்க உள்ளது அபுதாபி முதலீட்டு ஆணையம் (ADIA).

சுட்கர் குடும்பம் ஆதிக்கம்
 

சுட்கர் குடும்பம் ஆதிக்கம்

65,000 கோடி ரூபாய் அளவில் மதிப்பிடப்படும் இன்டாஸ் பார்மா நிறுவனம் தற்போது தனது ப்ரோமோட்டர்களான சுட்கர் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிறுவனத்தில் சுட்கர் குடும்பம் சுமார் 84 சதவீத பங்குகளை வைத்துள்ளது, இந்தியத் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான ChrysCapital 6 சதவீத பங்குகளை வைத்துள்ளது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள்

வெளிநாட்டு முதலீட்டாளர்கள்

இப்புதிய முதலீட்டின் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பிரிவில் இதுநாள் வரையில் டெமாசெக் ஹோல்டிங்ஸ் நிறுவன மட்டுமே இருந்த நிலையில் புதிதாக அபுதாபி முதலீட்டு ஆணையம் (ADIA) இணைந்து தத்தம் 7 மற்றும் 3 சதவீத பங்குகளை வைத்துள்ளது.

ADIA இந்திய முதலீடுகள்

ADIA இந்திய முதலீடுகள்

அபுதாபி முதலீட்டு ஆணையம் (ADIA) சுமார் 800 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்தியாவில் பல நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள ADIA, பிளிப்கார்ட், ரிலையன்ஸ் ரீடைல், மைண்ட்ஸ்பேஸ் REIT, ஹெச்டிஎப்சி கேப்பிடல், மெப்சிஸ், பேடிஎம், நைகா, மொிபிகிவிக் ஆகியவை முக்கிய முதலீடாக விளங்குகிறது. 2018 முதல், ADIA இந்தியாவில் 3 பில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளது.

 7வது பெரிய நிறுவனம்

7வது பெரிய நிறுவனம்

இன்டாஸ் பார்மா ஏழாவது பெரிய உள்நாட்டு ஃபார்முலேஷன் நிறுவனமாகும், அதன் வருவாயில் ஏறக்குறைய 30% உள்நாட்டிலும், சுமார் 40% பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய சந்தைகளிலிருந்தும், மீதமுள்ளவை அமெரிக்கா மற்றும் பிற சந்தைகளிலிருந்தும் பெற்று வருகிறது.

1977 முதல்

1977 முதல்

1977 இல் ஹஸ்முக் சுட்கர் மூலம் நிறுவப்பட்ட இன்டாஸ் பார்மா, தற்போது சுட்கர் குடும்பத்தின் இரண்டாம் தலைமுறையினரால் நிர்வகிக்கப்படுகிறது, இன்டாஸ் பார்மா நிர்வாகம் பினிஷ் சுட்கர், நிமிஷ் சுட்கர் மற்றும் ஊர்மிஷ் சுட்கர் ஆகியோர் கட்டுப்பாட்டில் உள்ளது. உலகம் முழுவதும் 16 உற்பத்தி நிலையங்களைக் கொண்டு 85 நாடுகளில் இந்நிறுவனம் வர்த்தகம் செய்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Abu Dhabi Investment Authority acquire 3 percent stake in Intas Pharma with 270 million investment

Abu Dhabi Investment Authority acquires 3 percent stake in Intas Pharma with 270 million investment இந்திய பார்மா நிறுவனத்தில் முதலீடு செய்யும் அபுதாபி அரசு நிறுவனம்.. வாவ்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.