தலைமைச் செயலகத்தில் ஆதீனங்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோனை

தமிழகத்தில் உள்ள ஆதீனங்களுடன் சற்று நேரத்தில் தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
தருமபுரம் ஆதினம், காஞ்சிபுரம் ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், திருவண்ணாமலை ஆதீனம், குன்றக்குடி அடிகளார், சூரியநாராயண ஆதீனம், அழகிய மணவாள ஜீயர், சிவக்கிரக யோகிகள் மடத்தின் ஆதீனம் உள்ளிட்ட 11 ஆதீனங்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோனையில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, செயலாளர் சந்திமோகன், ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

வரும் மே 5ம் தேதி அறநிலையத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்க உள்ள நிலையில் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.

இதையும் படியுங்கள்..
தஞ்சை அருகே சோகம் – தேர் மீது மின்சாரம் பாய்ந்து 11 பேர் பலி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.