Fashion News In Tamil: Bra-ல இவ்ளோ வகை இருக்கு… செலக்ட் பண்ணுவது எப்படி?

Tamil Lifestyle Update : பொதுவாக பெண்கள் தங்களது உடைகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இதிலும், பருவமடைந்த பெண்கள் தங்கள் உடல் அமைப்பு மற்றும் மார்பகங்களை பாதுகாக்கும் வகையில் சரியான அளவுள்ள உடைகளை தேர்தெடுப்பது நல்லது. மற்ற உடைகளை போல் பெண்கள் தங்களது உள்ளாடைகளை தேர்வு செய்தவதற்கு தயக்கம் காட்ட கூடாது. குறிப்பாக மார்பகங்களை பாதுக்காக்கும் உள்ளாடைகளை கவனமுடன் தேர்வு செய்ய வேண்டும்.

பெண்கள் பருவமடையும் வயதில் இருந்தே தங்களது மார்பகங்களை பாதுகாக்கும் வகையில் ப்ரா அணியும் பழக்கத்தை கடைபிடித்து வருகின்றனர். டீன் வயதில் இருந்து பயன்படுத்தி வந்தாலும் பல பெண்களுக்கு தங்களது மார்பகத்தின் அளவுக்கேற்ற ப்ராக்களை வாங்குவதில்லை. அப்படி சரியான அளவு இல்லாத ப்ராவை அணியும் போது அசகவுரியங்கள் அதிகளவில் ஏற்படும்.

அதே சமயம் உள்ளாடை தேர்வு செய்யும்போது நிறத்தில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். லைட் நிற ஆடைகளுக்கு லைட் நிறத்திலும், டார்க் நிற ஆடைகளுக்கு டார்க் நிறத்திலும் தேர்ந்தெடுப்பது நல்லது. மேலும் தங்கள் அணியும் உடைக்கு ஏற்ற மாதிரி ப்ராக்களை தேர்வு செய்ய வேண்டும். தளர்ந்திருக்கும் மார்பகத்திதை தாங்கி பிடிக்க அண்டர்வயர்டு ப்ரா பயன்படுகிறது.

மார்பகம் சிறிதாக உள்ள பெண்களுக்கு பேடட் ப்ரா பயனுள்ளதாக இருக்கும். இப்படி பெண்கள் தங்களது ஒரே வகையான ப்ராவை பயன்படுத்தாமல், இடத்திற்கு தகுந்தார்போல் (அலுவலகம், பங்ஷன்) வெளியிடங்களுக்கு செல்லும்போது அதற்கு ஏற்ற ப்ராவை அணிந்து செல்வது நல்லது

அந்த வகையில் பெண்களுக்கு ஏற்ற சில ப்ரா வகைகள் :

டீனேஜ் பிரா : முதல்முறையாக ப்ரா பயன்படுத்தும் பெண்கள் இந்த டீன்ஏஜ் ப்ராவை பயன்படுத்தி அசவுகரியம் இல்லாமல் இருக்கலாம்

எவ்ரிடே பிரா : குறைந்த எடை மற்றுமு் மார்பகத்தை எளிதாக பராமரிக்க இந்த ப்ராவை பயன்படுத்தலாலம். தினசரி ஆடைகளுக்கு ஏற்றது.

டி-ஷர்ட் பிரா : மெல்லிய டாப்ஸ் மற்றும் டி-ஷர்ட்களை பயன்படுத்தும் பெண்கள் இந்த ப்ராவை பயன்படுத்தலாம்.

 புஷ் அப் பிரா : தளர்ந்த மார்பகத்தை தாங்கி பிடிக்கவும், எடுப்பாக மார்பகத்தை கொக்கவும், இந்’த ப்ரா உதவுகிறது.

நர்சிங் பிரா : பாலூட்டும் தாய்மார்களுக்காவே பிரத்யோகமாக தயாரிக்கப்பட்டது தான் இந்த நர்சிங் ப்ரா. இதன் முன்பகுதியில் இருபுறமும் பட்டன்கள் இருப்பதால் குழந்தைகளுக்கு பாலூட்ட வசதியாக இருக்கும்.

ஃபிரன்ட் ஓப்பன் பிரா : பின்பகுதியில் ஊக்குபோட சிரமப்படுபவர்கள், இந்த பிராக்களைப் பயன்படுத்தலாம். இதில் ஊக்கு/கொக்கி முன்பகுதியில் அமைந்திருக்கும்.   

கேஜ் பிரா : லோ நெக் டாப்ஸ் மற்றும் டி-ஷர்ட்களை அணியும்போது இவ்வகையான பிராக்களைப் பயன்படுத்துவது வசதியாக இருக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.