அணுஆயுதப் போர் உறுதி…நாம் அனைவரும் இறக்க போகிறோம்: ரஷ்ய அரசு தொலைக்காட்சி தலைவர் எச்சரிக்கை!


செய்தி சுருக்கம்: 

  • போரில் தோல்வியடைந்தால் ரஷ்ய ஜனாதிபதி புடின் அணுஆயுதத்தை பயன்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகம் RT தலைவர் கருத்து.
  • நாம் அனைவரும் விரைவில் சாகப்போகிறோம் என மார்கரிட்டா சிமோனியன் பேச்சு.
  • புடினின் அணுஆயுதம் உலகின் எந்த முலையையும் தாக்கலாம் என எச்சரிக்கை.

அணுஆயுத போருக்கு அதிகமான வாய்ப்பு இருப்பதால் நாம் விரைவில் சொர்க்கதிற்கு செல்வோம் என ரஷ்ய அரசு தொலைக்காட்சியின் தலைவர் மார்கரிட்டா சிமோனியன் கருத்து தெரிவித்துள்ளார்.

ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் 64 நாள்களை கடந்து தற்போது அணுஆயுத போராக மாறக்கூடிய தீவிரக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில், உக்ரைன் போரில் ரஷ்ய தோல்வி அடைந்தால் நிச்சியமாக ஜனாதிபதி புடின் அணுஆயுதத்தை பயன்படுத்துவார் என ரஷ்ய அரசு தொலைக்காட்சியின் தலைவர் மார்கரிட்டா சிமோனியன் தெரிவித்து ரஷ்யாவில் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

ரஷ்ய அரசு ஊடகமான RT ரஷ்ய தொலைக்காட்சியின் தலைவர் மற்றும் ரஷ்யாவின் மூத்த பிரச்சாரக்காரரான மார்கரிட்டா சிமோனியன் (Margarita Simonyan) தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, போரில் ரஷ்யா தோல்வியடைந்தால் ஜனாதிபதி புடின் அணுஆயுதத்தின் சிவப்பு பொத்தானை அலுத்துவதற்கான அதிகமான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த பதற்றமானது, உக்ரைன் போரில் ரஷ்யா தோல்வியடைந்தாலும், இல்லை இவை முன்றாம் உலக போராக மாறினாலும் அணுஆயுத தாக்குதலை தவிர்க்க முடியாது எனவும் ரஷ்ய ஜனாதிபதியை (putin) அறிவதன் முலம் மூன்றாம் உலக போர் என்பது யதார்த்தமானது என மார்கரிட்டா சிமோனியன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நிலைமை தன்னை திகிலடைய வைத்து வருவதாகவும், மேற்கில் உள்ளவர்கள் நம்மை பார்த்து கதரும் போது நாம் சொர்க்கத்தில் இருப்போம் என்றும், நாம் அனைவரும் ஒருநாள் சாகப் போகிறோம் என தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் ரஷ்யாவால் அணுஆயுத ஏவுகணை – சர்மட் 2 (missile – Sarmat 2) சோதனை செய்யப்பட்ட இருக்கும் இந்த நிலையில், ரஷ்ய ஜனாதிபதியின் புடின் ஏவும் அணுஆயுதம் இந்த உலகின் எந்த மூலையையும் தாக்கலாம் என எச்சரித்துள்ளார்.

கூடுதல் செய்திகளுக்கு: 7 மில்லியன் டொலர் ராணுவ அயுதங்கள்… தாலிபான்களிடம் விட்டு சென்ற அமெரிக்கா

ரஷ்ய ஜனாதிபதி புடின், வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் அகியோரின் தொடர் ஆணுஅயுத எச்சரிக்கைகளை அமெரிக்கா மற்றும் பிரித்தானியா தொடர்ந்து புறக்கணித்து வரும் நிலையில் மார்கரிட்டா சிமோனியன் கருத்து உலக அளவில் பொதுமக்கள் மற்றும் அரசாங்கங்களை பீதியடைய வைத்துள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.