கொரோனாவால் இறந்தவர்கள் இழப்பீடு பெற கால நிர்ணயம்:தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா காரணமாக மார்ச் 20ம் தேதிக்கு முன் ஏற்பட்ட இறப்புகளுக்கான இழப்பீடு கோரி விண்ணபிக்க காலக்கெடு இரண்டு மாதங்களாக இருக்கும். சமீபத்தில் நடந்த மற்றும் எதிர்கால இறப்புகளுக்கு இது மூன்று மாதங்கள் ஆக இருக்கும். மார்ச் 20, 2022க்கு முன் தொற்றால் மரணம் ஏற்பட்டால், இழப்பீடு பெறுவதற்கான ஆவணங்கள் தாக்கல் செய்ய அறுபது நாட்கள் காலக்கெடுவாக இருக்கும். எதிர்கால இறப்புகளுக்கு, இழப்பீடு கோருவதற்கு இறந்த தேதியிலிருந்து 90 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். யாரேனும் போலியாக விண்ணப்பித்தால், பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 இன் பிரிவு 52ன் கீழ் தண்டிக்கப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.