Tamil News Today Live: பெட்ரோல், டீசல் விலை.. நாடகமாடுவது யார் என்பது மக்களுக்கே தெரியும்- பிரதமர் குற்றச்சாட்டுக்கு மு.க.ஸ்டாலின் பதில்!

Tamil Nadu News Updates: நாடு முழுவதும் 6 முதல் 12 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்குகிறது. சிறுவர்களுக்கு விரைவாக கொரோனா தடுப்பூசி செலுத்த பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தல்

புதுச்சேரியில் 1-9ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி

புதுச்சேரியில் 1ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி. கொரோனா பரவல் காரணமாக நேரடி வகுப்புகள் நடைபெறாத நிலையில், புதுச்சேரி பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

இன்றைய விலை நிலவரம்

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் லிட்டர் 110.85 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 100.94 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

குரூப் 4 – விண்ணப்பிக்க கடைசி நாள்

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்றுடன் நிறைவு. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இன்று இரவு 12 மணி வரை குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

ஐபிஎல்: குஜராத் அணி வெற்றி

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி வெற்றி. முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

Live Updates
12:16 (IST) 28 Apr 2022
பெட்ரோல் மீதான வரியை மத்திய அரசு 200% உயர்த்தியது!

பெட்ரோல், டீசல் மீதான வரியை அதிக அளவில் உயர்த்தியது மத்திய அரசுதான். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல், டீசல் மீதான வரி 7 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் பெட்ரோல் மீதான வரியை மத்திய அரசு 200% உயர்த்தியது. திமுக அரசு ஆட்சியில் இருந்தபோதெல்லாம் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் பெட்ரோல் மீதான வரியை ரூ. 3 குறைத்தார் – பிரதமரின் குற்றச்சாட்டுக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில்!

12:15 (IST) 28 Apr 2022
நாடகமாடுவது யார்?

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தி மக்களை கஷ்டப்படுத்துகிறது மத்திய அரசு. பெட்ரோல் மீதான வாட் வரி குறித்த பிரதமரின் பேச்சு முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதை போலானது. 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்கவில்லை. பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதில் முனைப்பு காட்டுவது யார்? நாடகமாடுவது யார்? என்பது மக்களுக்கே தெரியும்- சட்டப் பேரவையில் பிரதமர் குற்றச்சாட்டுக்கு மு.க.ஸ்டாலின் பதில்.

11:29 (IST) 28 Apr 2022
தஞ்சை தேர் விபத்து.. அன்பில் மகேஷ் விளக்கம்!

தஞ்சாவூர் தேர் விபத்தை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம். தேர் விபத்து குறித்து விசாரிக்க ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தேர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை, முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தேர் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிறப்பு சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது என சட்டப் பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

11:08 (IST) 28 Apr 2022
கொடநாடு வழக்கு.. தனிப்படை போலீசார் விசாரணை!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், அதிமுக பிரமுகர் சஜீவனின் சகோதரர் சிபியிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களாக சஜீவனிடம் விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று அவருடைய சகோதரரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

11:08 (IST) 28 Apr 2022
உதயநிதி ஸ்டாலின் மீதான வழக்கு தள்ளுபடி!

திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து தொகுதி வாக்காளர் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

10:35 (IST) 28 Apr 2022
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு. 4 யூனிட்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. நிலக்கரி தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்!

10:34 (IST) 28 Apr 2022
மாநில வரிகளை மேலும் குறைக்க சொல்வது நியாயமா? – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

மத்திய அரசின் வரிகள் அதிகமாக இருக்கும்போது, மாநில அரசு வரிகளை மேலும் குறைப்பது நியாயமா? சாத்தியமா? மத்திய அரசு செஸ் மற்றும் கூடுதல் கட்டணங்களை நீக்கி, 2014ல் இருந்த விகிதங்களுக்குத் திரும்ப வேண்டும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

10:12 (IST) 28 Apr 2022
கடந்த 24 மணி நேரத்தில் 3,303 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,303 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் 2563 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 39 பேர் உயிரிழந்துள்ளனர். 46 நாள்களுக்கு பிறகு, கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

10:03 (IST) 28 Apr 2022
2 வது நாளாக பற்றி எரியும் பெருங்குடி குப்பைக்கிடங்கு

சென்னை பெருங்குடியில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க, 2 ஆவது நாளாக தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். காற்றின் வேகத்தால் குப்பைக்கிடங்களில் தீயை அணைப்பதில் சிக்கல்

09:19 (IST) 28 Apr 2022
ஜப்பானில் பைடனை சந்திக்கிறார் பிரதமர் மோடி

ஜப்பானில் அடுத்த மாதம் அமெரிக்கா அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசுகிறார் பிரதமர் மோடி. தென்கொரியாவில் மே 20 முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் பைடனும், மோடியும் சந்தித்து பேசவுள்ளனர்.

08:54 (IST) 28 Apr 2022
மே 1 அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மே 1ம் தேதி கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என்று அறிவிப்பு

08:33 (IST) 28 Apr 2022
ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட அனுமதி

சென்னை ஐஐடியில் அரசு நிகழ்ச்சியின்போது, தேசிய கீதம் மற்றும் வந்தே மாதரத்துடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாட மத்திய அரசு அனுமதி

07:59 (IST) 28 Apr 2022
மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வரி பாக்கி ரூ78.704 கோடி – மத்திய நிதி அமைச்சகம்

ஜிஎஸ்டி வரியாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ரூ78,704 கோடி நிலுவை தொகை தர வேண்டும் என மத்திய நிதி அமைச்சகம் தகவல்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.