நண்பர்களுடன் ஊட்டி சென்றபோது கார் கவிழ்ந்ததில் சென்னை எஸ்.ஐ மகன் பலி

சேலம்: சேலம் குமரகிரி பைபாஸ் சாலையில் நேற்று அதிகாலை கார் கவிழ்ந்து சென்னையை சேர்ந்த எஸ்ஐ மகன் பலியானார். சென்னை ஆயிரம் விளக்கு காவலர் குடியிருப்பில் வசிப்பவர் அந்தோணிதாசன். ஆயிரம் விளக்கு போலீஸ் எஸ்.ஐ. இவரது மகன் அருண் (26), தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் ஊட்டிக்கு, நண்பர்களான பள்ளிக்கரணை ஜேம்ஸ் ஆல்பர்ட்(32), பரங்கிப்பேட்டை ஆனந்த்(32),  ஏழுகிணறு பமரியா பெர்டினல்(26) ஆகியோருடன் காரில் புறப்பட்டார். காரை சென்னை டிரைவர் அருண் ஜர்சன் ஓட்டினார். நேற்று அதிகாலை சேலம் உடையாப்பட்டி, குமரகிரி பைபாஸ் சாலை அருகில் வந்த போது, ஒரு பெண் சாலையை கடக்க முயன்றார். உடனே டிரைவர் இடதுபுறமாக திருப்ப முயன்ற போது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் திடீரென கவிழ்ந்தது. தகவலறிந்து வந்த அம்மாப்பேட்டை போலீசார் காருக்குள் இருந்தவர்களை மீட்டு சேலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே அருண் உயிரிழந்தார். டிரைவர் உள்பட 4 பேருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.