தமிழர் பகுதியில் கைது செய்யப்பட்ட பெண்கள்: வெளியான காரணம் (Video)

நாட்டில் பல்வேறு குற்றச்செயல்கள் அதிகரித்த வண்ணமே உள்ளது. எரிவாயு தட்டுப்பாடு காரணமாக வழிப்பறி கொலை மற்றும் பாரிய கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவது, பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள், மற்றும் போதைப்பொருள் கடத்தல் என்பன அடங்குகின்றன. யாழில் போதை பொருள் விற்பனையில் பெண்கள் ஈடுபடுவது அதிகரித்துள்ள நிலையில் கடந்த 6 மாத காலப்பகுதிகளில் யாழில் 8 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் அரியாலை பகுதியை சேர்ந்த 49 வயதுடைய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் யாழ்ப்பாணம் மாநகரில் … Read more

சொகுசு படகுகள், குடியிருப்புகளை அவசர அவசரமாக விற்கும் சவுதி அரச குடும்பம்: வெளிவரும் பின்னணி

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசருக்கு பயந்து, அரச குடும்பத்து உறுப்பினர்கள் பலர் தங்களின் சொத்துக்களை அவசர அவசரமாக விற்பனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக சல்மான் முடி சூடிய பின்னர், நாட்டில் மட்டுமல்ல சொந்த குடும்பத்திலும் அதிரடி காட்டி வருகிறார். சவுதி அரேபியாவில் இதுவரை அமுலில் இல்லாத பல முக்கிய நகர்வுகளையும் அவர் முன்னெடுத்துள்ளார். மேலும், நிதி முறைகேடு, ஊழலில் ஈடுபட்டு வந்த சொந்த குடும்ப உறுப்பினர்கள் உட்பட அரசாங்க அதிகாரிகள் … Read more

ஆம் ஆத்மியை பார்த்து பாஜக பயப்படுகிறது என்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்

புதுடெல்லி: டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆட்சியை பிடித்துள்ள ஆத் ஆத்மி கட்சி அடுத்த கட்டமாக பாஜகவின் கோட்டையாக கருதப்படும் குஜராத்தில் களம் இறங்க திட்டமிட்டு வருகிறது.  மேலும் இமாச்சல் பிரதேச சட்டசபைத் தேர்தலிலும் போட்டியிட அந்த கட்சி முடிவு செய்துள்ளது.  கடந்த மாத தொடக்கத்தில்  குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடந்த பேரணியில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலும், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானும் பங்கேற்றிருந்தனர்.    இதன் தொடர்ச்சியாக சூரத் … Read more

சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் உள்ளூர் மொழியில் நீதிமன்றத்தில் விசாரணை: முதல்வர்கள், நீதிபதிகள் மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘சாமானிய மக்களுக்கும் புரியும் வகையில், நீதிமன்றங்களில் உள்ளூர் மொழியில் விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என முதல்வர்கள், நீதிபதிகள் மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மாநில முதல்வர்கள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் கூட்டு மாநாடு டெல்லி விஞ்ஞான் பவனில் நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா மற்றும் யோகி ஆதித்யநாத் (உபி), மம்தா பானர்ஜி (மேற்கு வங்கம்), ஜெகன் மோகன் ரெட்டி (ஆந்திரா) … Read more

கடிகாரம் ஓடும் முன் ஓடுகிறேன்; தேனி, திண்டுக்கல் அரசு விழாக்களில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு| Dinamalar

-தேனி, மே 1 : ”10 ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனைகளை ஓராண்டில் செய்து முடித்துள்ளோம். ‘கடிகாரம் ஓடும் முன் ஓடு’ என்ற பாரதிதாசன் வரிகளுக்கு ஏற்ப உழைத்துக் கொண்டிருக்கிறேன்” என தேனி – அன்னஞ்சி பைபாஸ் ரோட்டில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். விழாவில் அவர் பேசியதாவது: ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் இருந்து தேனி மாவட்டத்தை 1997 ல் உருவாக்கியவர் அன்றைய முதல்வர் கருணாநிதி. கலெக்டர் அலுவலக கட்டடம், … Read more

கிளாமரில் போஸ் கொடுக்கு நிஷ்மா செங்கப்பா

ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய நிறம் மாறாத பூக்கள் என்ற தொடரில் வில்லியாக அறிமுகமானார் நிஷ்மா செங்கப்பா. கன்னடத்தை சேர்ந்த இவர் 17 வயதிலேயே திரைப்படம் ஒன்றிலும் ஹீரோயினாக நடித்துள்ளார். தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரையில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். அழகாக இருக்கும் நிஷ்மா செங்கப்பா சோஷியல் மீடியாவின் முக்கியத்துவத்தை தற்போது உணர்ந்துள்ளார். எனவே, அவரும் மற்ற நடிகைகள் போல சமீபகாலங்களாக விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். இந்நிலையில் அவர் தற்போது மாடல் உடையில் மேலாடையின் … Read more

கொடநாடு வழக்கு: பூங்குன்றனிடம் 2வது நாளாக தொடரும் விசாரணை

நீலகிரி மாவட்டம் கோத்தகரி அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில், கடந்த 2017இல் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த வழக்கு ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் உள்ளனர். இவ்வழக்கில் கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் முதல் மறு விசாரணை நடைபெற்று வருகிறது. 5 தனிப்படைகள், கோவை, சேலம், நீலகிரி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் … Read more

தமிழகத்தில் ஞாயிறு கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்பட வேண்டும் – மநீம கோரிக்கை.!

மக்கள் நீதி மய்யம்  மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “மக்கள் பல்வேறு சலுகைகள், சான்றிதழ்கள் பெறுவதற்காக  அரசு அலுவலகங்களை நாடுகின்றனர். மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் அரசு அலுவலகங்கள் மக்களின் தேவை, வசதிக்கேற்ப செயல்படவேண்டியது அவசியம். ஆனால், பிரிட்டிஷ் காலத்து அரசு நிர்வாக நடைமுறைகளிலுள்ள சிக்கல்கள், இலஞ்ச-ஊழல் போக்குகள் காரணமாக குறித்த காலத்திற்குள் சேவைகள் கிடைப்பதில்லை. பலநாட்கள் அல்லது பலமாதங்கள் திரும்பத்திரும்ப அரசு அலுவலகங்களுக்கு அலைந்தால்தான் நமது தேவை பூர்த்தியாகும் என்பதே இன்றைய எதார்த்த … Read more

கொரோனாவை விடக் கொடிய தொற்றாக குழந்தைகள் மனதைக் கெடுத்துக் கொண்டுள்ளனர் – உயர்நீதிமன்றம் வேதனை

ஆசிரியர்களிடம் மாணவர்கள் தவறாக நடந்துகொள்வது குறித்து வேதனை தெரிவித்த உயர்நீதிமன்றம், அதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை மற்றும் சமூக நலத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. 17 வயதுச் சிறுமியைக் கர்ப்பமாக்கியதாக 15 வயதுச் சிறுவனுக்கு திருவள்ளூர் சிறார் நீதி குழுமம் 3 ஆண்டு தண்டனை விதித்த நிலையில், அதனை எதிர்த்து சிறுவன் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் விசாரணையில், கொரோனா ஊரடங்கு காலத்தில், டிவி, மொபைல்களில் மூழ்கிய குழந்தைகள், கொரோனாவை விட கொடிய … Read more