ஆன்லைன் ஷாப்பிங் முதல் வங்கி கணக்குகள் வரை: ஹேக்கர்கள் ‘உஷார்’

இன்றைய டிஜிட்டல் உலகில் இணையப் பயன்பாடு எந்த அளவிற்கு அதன் பயனர்களுக்கு சக்தி வாய்ந்ததாக இருந்து வருகிறது என்பதை மீண்டும் மீண்டும் பரிசோதிக்க வேண்டியது அவசியமாகிறது.

மின்னஞ்சல் (இ-மெயில்) தொடங்கி சமூக வலைதள கணக்குகள் வரை அனைத்திற்கும் பாஸ்வேர்டு இருப்பதால் தகுந்த பாதுகாப்பு உள்ளது. இருந்தாலும் சமயங்களில் இணையப் பயனர்களின் சிறியதொரு கவனக் குறைவால் அவர்களது தனி நபர் விவரங்கள் தொடங்கி வங்கி விவரங்கள், கிரெடிட் கார்டு உள்ளிட்ட விவரங்களை ஹேக்கர்கள் சேகரிக்கும் அபாயம் உண்டு. அதன்மூலம் மோசடி வேலைகளையும் அவர்கள் மேற்கொள்ளலாம்.

தனிப்பட்ட சமூக வலைதள கணக்குகளில் புரொஃபைல் விவரங்களை லிமிட் செய்வதும் அவசியம். இதன் மூலம் ஒரு பயனர் தனக்கு தெரிந்த நபர்களுடன் மட்டுமே அவரது தகவலை பகிர்ந்து கொள்ள முடியும்.

இப்போது பெரும்பாலான இடங்களில் இலவச வை-ஃபை கனெக்‌ஷன் கிடைக்கிறது. அதை பயன்படுத்தும் பயனர்களின் போன்களில் உள்ள தகவல்களை வை-ஃபை இணைப்பை இலவசமாக கொடுக்கும் சர்வீஸ் வழங்குபவர்கள் சேகரிக்கலாம் என சொல்லப்படுகிறது. இதில் வங்கி கணக்கு விவரங்கள், பாஸ்வேர்டுகள் போன்றவையும் சேகரிக்கப்படும் என சொல்லப்படுகிறது. அதனால் மொபைல் டேட்டாவை பயன்படுத்துவதுதான் இதற்கான தீர்வாக இருக்கும்.

மேலும், ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்யும் வழக்கம் அதிகரித்துள்ளது. அப்படி பொருட்களை வாங்கும்போது வீட்டு விலாசம், வங்கிக் கணக்கு விவரம் மாதிரியானவற்றை பயனர்கள் கொடுக்கின்றனர். அதனை ஹேக்கர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம். அதனால் நம்பத்தகுந்த ஆன்லைன் தளங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என வல்லுநர்கள் சொல்கின்றனர்.

அதே போல ஆன்லைனில் அறிமுகமாகும் நண்பர்கள் உடனும் பயனர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் ஹேக்கர்கள் சமயங்களில் மாற்று முறையில் வேறு பெயரில் தங்கள் வேலைகளை மேற்கொள்வார்கள் எனவும் சொல்லப்படுகிறது.

மேலும் அப்டேட் செய்யப்பட்ட சைபர் செக்யூரிட்டி சாப்ட்வேர்களை பயன்படுத்துவது அவசியமாகிறது. ஏனெனில் நெட்வொர்க் மூலம் டெலிவராகும் இன்டர்நெட் மால்வேர்களை பயன்படுத்தி ஹேக்கர்கள் தங்களுக்கு வேண்டிய தகவல்களை எடுத்துவிடுவார்கள். அதனை தடுக்க இந்த சைபர் செக்யூரிட்டி சாப்ட்வேர்கள் உதவுகின்றன.

> இது, ‘இந்து தமிழ் திசை’ ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க – டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.